-1-

5.2K 77 6
                                    

ஓமான் விமான நிலையம்!

விமான நிலையத்தின் டிஜிட்டல் திரை மாலை மூன்று மணி இருபது நிமிடம் எனக் காட்டியது. விமானத்தை விட்டு இறங்கியதில் இருந்து இதுவரை நான்கு தடவைகள் திரையில் நேரத்தை பார்த்து விட்டான். முதல் பார்த்திலிருந்து வெறுமனே பத்து நிமிடங்கள் மட்டுமே ஓடியிருந்தது.

என்றைக்கும் இல்லாமல் இன்று அவனுக்கு நொடிகள் நகர மறுத்தன. இதில் இன்னும் மூன்று மணிநேரத்திற்கு இங்கேதான் இருந்தாக வேண்டும்.

அந்தப் பத்து நிமிடங்களையும் தன்னை சுற்றி நடப்பவர்களையும், நடப்பவைகளையும் நோட்டமிட்டபடி கடத்தியவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை.

விமான நிலையத்தினுள் இருந்த ஒரு உணவகம் அவன் பார்வையில் விழ அதனுள் நுழைந்தான். சாப்பிட்டு தீர்க்கும் அளவுக்கு பசி இல்லாவிடினும் நேரத்தை கரைக்க ஏதாவது கொரிக்கலாம் என்ற எண்ணத்தில் இரண்டு சண்ட்விச், ஒரு ஜூஸ் பொட்ல் உடன் வெளியில் வந்து ஆரம்பத்தில் அமர்ந்திருந்த இருக்கையிலே அமர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அவனுக்கு இலங்கைக்கான விமானம் ஓமான் நேரப்படி மாலை ஆறரை மணிக்குத்தான். திட்டமிடாத திடீர் பயணம் என்பதால் எவ்வளவு முயன்றும் இலங்கைக்கான நேரடி விமான டிக்கெட் கிடைக்கவில்லை. ஓமான் ட்ரான்ஸிட் டிக்கெட் தான் கிடைத்தது.

அவன் gulf இற்கு வந்து சுமார் மூன்றரை வருடங்கள் கடந்து விட்டது. இப்போதும் அவனுக்கு பிறந்த மண்ணை எட்டிப் பார்க்க மனம் வந்திருக்காது அவனது தாயாரின் உடல் நிலை சீராக இருந்திருந்தால்.

ரய்யான் இருபத்தியெட்டு வயது இளைஞன். பார்ப்பவர்களை வசீகரிக்கும் தோற்றமும் ஆளுமையும் கொண்ட ஆறடி ஆண் மகன்.

ரய்யானின் தந்தை இஸ்மாயில் ஸ்பைஸஸ் ஓல்சேல் வியாபாரம் செய்துவந்தார். தன் சொந்த உழைப்பில் கட்டிடம் ஒன்றை விலைக்கு வாங்கி  வியாபாரத்தை விருத்தி செய்தவர். ஆனால் தற்போது அதை மூத்த மகனின் பொறுப்பில் விட்டு விட்டார். தாயார் ஆயிஷா ஓய்வு பெற்ற ஆசிரியை. ரய்யானுக்கு உடன் பிறந்தது ஒரே ஒரு சகோதரன் மட்டுமே. பெயர் ரியாஸ். அவன் திருமணம் முடித்து அவனுக்கு மூன்று வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now