-44-

712 40 7
                                    

தன்னை நிமிர்ந்து பார்க்க கூனிக்குறுகி குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்த தங்கையின் நாடியை நிமிர்த்தினான் ஹிஜாஸ்.

"லூசா நீ. உன்னைப்பத்தி எங்களுக்குத் தெரியாதா. நாங்க ஒருநாளும் அப்படி நினைக்க மாட்டம். எதுவானாலும் எங்கள்ட பயப்படாம சொல்லலாம். இவ்வளோ சின்ன விஷியத்துக்குப்போய் கண்டதையும் யோசிச்சி பயந்து ரூமுக்குள்ள ஒழிஞ்சிட்டு.."

"டியூஷன்ல, ஸ்கூல்ல போறவார இடத்துலெல்லாம் அந்த க்ளாஸ் போய்ஸ் அவன் பேரைச்சொல்லி என்னை கிண்டல் பண்ணுவாங்க நாநா. அதுக்குபிறகு எல்லாருக்கும் தெரிஞ்சிரும். எல்லாரும் நானும் அப்படித்தான்னு நினைப்பாங்க"

"அப்படியெதுவும் நடக்காது. நாநா இருக்கன். நான் பார்த்துக்குறன். நீ பயப்படாம நாளைக்கு ஸ்கூலுக்கு போ. அவனுங்க அப்படி தேவையில்லாத வேலை பார்த்தா ஸ்கூல்ல கம்ப்ளைன் பண்ணலாம்"

"ம்ம்ம்.. "

"இன்னொரு முக்கியமான விஷியம். இது எதையும் வீட்ல சொல்லாத. சரியா. நீயும் இப்படி ரூமுக்குள்ள ஒழியாம எப்பவும்போல இரு"

"Datha ட்டயும் சொல்ல வேணாமா?"

"இப்ப சொல்ல வேணாம். நான் பிறகு சொல்லிக்கிறேன். இப்ப ரூமைவிட்டு வெளில வா.. "

"இன்னும் கொஞ்சத்துல வர்றேனே.."

"வந்தா கேம் விளையாட போன் தருவேன்"

"உண்மையாவா!?"

"உண்மையா தருவேன்"

"உம்மா கண்டா ஏசுவாங்களே?"

"என்னோட ரூம்ல இருந்து விளையாடு. ஆனா விளையாடி முடிச்சிட்டு படிக்கனும். நாளைக்கு சயின்ஸ்ல கணிப்பீடு தானே"

"விளையாடிட்டு படிப்பன்"

"சரி இப்ப கட்டில விட்டு  இறங்கு" இறங்கியதுமே

"நான்.. நீ ஏசுவியோன்னு நினைச்சித்தான் வந்ததுமே சொல்லலை. Sorry நாநா" என்றாள் அண்ணனிடம்

"லூசு! எவனோ ஏதோ சொன்னா நான் ஏன் உன்னை ஏசனும். அவனைத்தான் நாலு சாத்து சாத்தனும்" அவனும் ஆதரவாக தங்கையின் தலையை வருடிவிட்டான்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now