-11-

762 35 0
                                    

அரவமின்றி தாயாரின் அறையினுள் நுழைந்தான். அங்கே மின்விசிறி சுழலும் ஓசைமட்டுமே கேட்டது.

உடலை சுருட்டிக்கொண்டு படுத்திருந்தார் ஆயிஷா. அவரது தேகம் முன்பிருந்ததன் கால்வாசியாய் மெலிந்திருந்தது. கன்னத்து எலும்புகளும் தெளிவாகத்தெரிந்தன.

ரய்யான் எதிர்பார்த்து வந்ததைவிட மோசமான தோற்றத்துடன் ஆயிஷா இருக்கவும் அவனால் தாங்கமுடியவில்லை. அவரை கட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது.

ஏற்கனவே கண்களில் கண்ணீர் கரைதாண்டியிருக்க இனியும் அங்கே நிற்க திராணியில்லாது தன்னுள் எழுந்த விம்மலை வாயில் கைவைத்து அடக்கியபடி வெளியில் வந்தான்.

நேராக இஸ்மாயிலிடம் சென்று அவரதோளில் தலைவைத்தான். அடக்கி வைத்திருந்த விம்மல் கதறலாக வெளியானது.

"ஏன் வாப்பா உம்மா இப்படி இருக்காங்க. இப்படி பிடுங்கி போட்ட கொடிமாதிரி குத்துயிரா இருக்கறதை பார்க்கவா என்னை இங்க வரசொன்னிங்க?! ஏன் முதல்லயே எனக்கு சொல்லலை!? "

இஸ்மாயில் மகனின் முதுகை ஆதரவாக வருடிவிட்டார்.

"என்னால--- என்னாலதானே உம்மா இப்படியாகிட்டாங்க.. என்னோட பிடிவாதம்தான் அவங்கள இந்தநிலமை---" கூறி முடிக்க முடியாமல் விசும்பினான்.

"அப்படியில்ல ரய்யான். அது இப்படித்தான் நடக்கனும்னு அள்ளாஹ் நாடியிருக்கான். நினைக்காததெல்லாம் நடந்துபோச்சு. நீ அழாத! எல்லாம் சரியாயிடும்" மகனை தேற்ற முயன்றார்.

"இல்ல! அள்ளாஹ் என்னை ஒருநாளும் மன்னிக்கவே மாட்டான். கொஞ்சங்கூட யோசிக்காம உம்மாவ இந்த நிலைக்கு கொண்டுவந்து எல்லாரையும் எவ்வளோ கஷ்டப்படுத்தியிருக்கன்.. நீங்களாவது என்னை மன்னிப்பீங்களா வாப்பா?!!"
தந்தையை பார்த்து கேட்டுவிட்டு மீண்டும் தோளில் சாய்ந்து கொண்டான்.

"அப்படியெல்லாம் சொல்லாத.
யாருமே தெரிஞ்சிகிட்டு செய்றதில்ல. எல்லாருக்கும் தவறுகள் நடக்கிறதுதான். நீ இருந்த சூழ்நிலை,வயது அப்படி.
அதுக்காக நடந்ததெல்லாம் உன்னாலனு சொல்லிற முடியாது"

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now