-15-

711 33 0
                                    

ரய்யான் மதிய உணவுக்குமுன் வீட்டுக்கு வந்து விட்டான். ஹிக்மா போனில் மூழ்கியிருந்தாள். ரய்யான் சலாம் சொல்லிக்கொண்டு உள்ளே வர துள்ளிக்கொண்டு சோபாவைவிட்டு எழுந்தாள்.

அவள் பயந்ததை பார்த்ததும் அவனறியாமலே சிரிப்பு வந்தது. சிரித்ததை அவள் பார்த்துவிட
"சலாம்தானே சொன்னேன். அதுக்கெதுக்கு இப்படி பயப்படுறீங்க" சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

"வஅலைக்குமுஸ்ஸலாம்" முனுமுனுப்பாகவே பதில் சொன்னாள்.

சிரித்ததற்காக அவன்மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் இப்படி சிரித்த முகமாக ரய்யான் அவளிடம் பேசுவது இதுவே முதல்தடவை என்பதால் மனதாலே மன்னித்துவிட்டாள்.

சிரிக்கும் போது அவன் முகம் இன்னும் வசீகரமாய் இருந்தது.

"ஏன் நிக்கிறீங்க உட்காருங்க" என்றான். அவன் அமர்ந்த பின்பே அவளும் அமர்ந்தாள்.

"எங்க போனிங்க? காலைல இருந்து காணவேயில்ல"

"சின்ன வேலை"

"ஓஹ்"

அவனுடன் முதன்முறையாக பேசும்போது என்னபேசுவதென திருமணம் நிச்சயமானதிலிருந்து பலவாறாக யோசித்து வைத்திருந்தாள்.

இரண்டு நாட்களாக பேச நினைத்து ஏமாந்து போனதில் அந்த ஆசையெல்லாம் வடிந்து போயிருந்தது. இப்படி திடீரென அவன் முன்னே வந்து நின்றதும் என்ன பேசுவதென்று எடுத்து வைத்தவை சிந்தனையைவிட்டு மாயமாகிவிட அவனாக ஏதும் சொல்வானென்று அவனை ஏறிட்டாள்.

ஏதோ சொல்வதற்கு சிரமப்படுவது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரியவும்

"ஏதாவது பிரச்சினையா? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க? "

"இல்லயில்ல. அப்படி ஒன்னுமில்ல. வீட்டில இருந்து பேசினாங்களா? சுகமா இருக்காங்களா? "

அவன் அவளைப்பற்றி ஏதாவது கேட்பான் என்ற எதிர்பார்ப்போடிருக்க அவன் வீட்டாரை பற்றிக் கேட்டதும் ஏமாற்றமாயிருந்தது.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now