-2-

1.8K 56 7
                                    

அவன் அருகே பதுமை போன்ற அழகுடன் ஒருத்தி தன் மொபைல் போனை காட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவனுக்குத்தான் அவள் சொல்வது எதுவும் செவிகளில் விழவில்லை. கண்ணை எடுக்காமல் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க

"ஹெலோ!!!! எக்ஸ் க்யூஸ்மீ மிஸ்டர்..!!" என அவள் தன்னால் இயன்றவரை பலமாக அழைக்க

'ஓஹ்! என்கிட்ட தான் ஏதோ சொல்றாங்க' என உணர்வு பெற்று

"Sorry?" என கேள்விக்குறியாக அவளை பார்க்க

"கென் யூ டு மீ அ பேவர் ப்ளீஸ்?"

அவனும் விழிகளாலே ஆமோதிக்க ஆங்கிலமும் சிங்களமும் கலந்த மொழியில் மணமக்களை போட்டோ எடுத்து தரும்படி தன் மொபைலை அவனிடம் நீட்டினாள்.

அதன் பின்பே ரய்யான் அங்கிருந்த கூட்டத்தையும், இருவருக்குமான உயர வித்தியாசத்தை கவனித்தான். அவளது முழு உயரமும் அவனது தோள்பட்டையை கூட எட்டவில்லை. ஆனாலும் அந்த வித்தியாசம் க்யூட் ஆக இருந்தது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

அவள் கேட்டது போல சில போட்டோக்களை எடுத்துக் கொடுத்து விட்டு பதிலுக்கு அவளின் நன்றியை பெற்று கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதன்பிறகு அவனைப் பிடித்திருந்த சோர்வு, களைப்பு, தலைவலி எல்லாம் போன இடம் தெரியவில்லை. சுவிட்ச் போட்டது போல உற்சாகம் அவனை தொற்றிக் கொண்டது.

அவனது மனமோ தான் செய்வது சரியா பிழையா என்றெல்லாம் ஆராயவில்லை. அங்கிருந்து வந்ததில் இருந்து அவன் விழிகள் மீண்டும் மீண்டும் அவளை காணவே ஏங்கின.

ஒருமுறை தாயாரிடம் பேசுவதற்கு செல்வதுபோல பெண்கள் பகுதிக்குள் நுழைந்து விழிகளால் அவளை தேடினான். ஆனால் அவள் சிக்கவில்லை.

வெளியில் வந்தவனுக்கு மறுபடியும் உள்ளே போக வேண்டும் அவளை சந்திக்க வேண்டுமென மனது துடிக்க ஆரம்பித்தது. சுற்றத்தை எண்ணி சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.

நேரம் கடந்து செல்ல திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஒவ்வொராக விடைபெற ஆரம்பித்தனர். ஓரிரு வார்த்தை பேசி அவர்களை வழியனுப்புவதில் ஈடுபட்டாலும் விழிகள் மட்டும் அவள் தரிசணதுக்காகவே தவமிருந்தன.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now