-24-

708 34 0
                                    

"Datha இந்த திங்கள் லீவுதானே"

"லீவுதான். ஆனா நிறைய வேலையிருக்கு ஹிம்னா. ஸ்கீம் போடனும். ஓ எல் வகுப்புக்கு எக்ஸாம் பேப்பர்ஸ் ப்ரிபெயர் பண்ணனும்"

"சரி அதை இங்க வந்தும் செய்யலாமே. நாநாவும் வந்திருக்கான். ப்ளீஸ் datha நீயும் வாயேன். எவ்வளவு நாளாச்சு வீட்டுக்கு வந்துட்டுப்போய்"

"சரி பாக்கலாம். ட்ரை பண்றேன். நீயும் அவனும் என்ன நிம்மதியா வேலை செய்யவா விடுவீங்க"

"இல்லயில்ல. வேலை செய்யிறப்ப எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டம். ப்ளீஸ் வாயேன்"

"சரி இன்ஷாள்ளாஹ் வார--" சொல்லி முடிக்க முதலே துள்ளிக்குதித்தாள் ஹிம்னா. ஹிக்மாவின் தங்கை.

"வியாழன் ஈவினிங் ரெடியா இரு. நாநா வருவான் உன்ன பிக் பண்ண" சொல்லிவிட்டு துண்டித்தாள்.

தங்கையிடம் வருவதாக சொல்லி விட்டாலும் மனது இன்னுமும் 'போகலாமா? வேண்டாமா?' விலே தத்தளித்துக் கொண்டிருந்தது.

வார இறுதியை தொடர்ந்து திங்கள் போயதினம். மூன்று நாட்கள் பாடசாலை விடுமுறை. அதனால்தான் அவள் வீட்டிலும்
அவளை அழைக்கிறார்கள்.

வீட்டுக்குப் போய்வர அவளுக்கும் ஆசைதான். எனினும் முடிக்க வேண்டிய சில பாடாசாலை அலுவல்களை நினைத்து அலுத்துக்கொண்டது மனது.

"ஆசையாக கூப்பிடறாங்க. நீங்களும் வீட்டபோய் நிறைய நாளாயிட்டு. எப்பவும் வேலை இருந்துட்டேதான் இருக்கும். லீவு கிடைக்கும் போது போய்டு வந்துருங்க மகள்" இஸ்மாயிலே சொல்லும் போது அவளுக்கும் சரியென்றே பட்டது.

மறுநாள் சொன்ன நேரத்திற்கு முன்னமே வந்து விட்டான் ஹிஜாஸ். ஹிக்மாவின் தம்பி. அவளைவிட சில வருடங்களே இளையவன். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறை இரண்டாமாண்டு மாணவன். அவனுக்கும் அதே விடுமுறையுண்டு. எனினும் மேலும் இரண்டு நாட்கள் சேர்த்து கட்டடித்து வீட்டுக்கு வந்திருந்தான்.

ஹிக்மா கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு பிறகு வீட்டுக்கு செல்கிறாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now