-6-

845 37 1
                                    

ரய்யான் அந்த அறையே அதிரும் படி கத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியது அனைவருக்குமே அதிர்ச்சி என்றாலும் அதிகம் பாதிக்கப்பட்டது ஆயிஷாதான். அதன்பின் யாருக்கும் சாப்பாடு தொண்டை குழிக்குள் இறங்கவில்லை.

அனைவருக்கு கை கழுவி எழுந்து கொள்ள ஆயிஷா மட்டும் இன்னும் அதே நிலையில் இருந்தார். ரியாஸ் அவரை மெதுவாக எழுப்பி கை கழுவ வைத்து அழைத்து வந்து வரவேற்பறையில் அமர வைத்தான்.

இஸ்மாயில் மகனை சமாதானம் செய்வதா, மனைவிக்கு ஆறுதல் சொல்வதா என குழம்பி போயிருந்தார். வீட்டின் சூல்நிலையை உணர்ந்து ரியாஸின் மனைவி சாப்பாட்டு அறையையும் சாப்பிட்ட தட்டுகளையும் சுத்தப்படுத்தி சமயலறையையும் சுத்தம் செய்தாள்.

அந்த வீட்டுக்கு வந்து இப்படியொரு நிகழ்வை முதல் தடவை பார்த்த அதிர்ச்சி அவளுக்கும் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் அவரவருக்குரிய தனிமை கொடுத்து அவள் சுத்தம் செய்வதுதான் மிக முக்கியமான வேலை என்பதுபோல ஒதுங்கியே இருந்தாள்.

ரியாஸ் தம்பியின் காதல் திருமணம் பற்றி அன்னையின் மனநிலை என்னவென தெரிந்து கொள்வதற்கு முயன்று கொண்டிருந்தான்.

"உம்மா! அவன் லவ் பண்றனு சொல்லும்போது கூட நீங்க எதிர்த்து எதுவும் சொல்லலையே. சந்தோசமா தானே இருந்தீங்க. பிறகு ஏன்மா இது வேணாம்னு சொல்லுறீங்க..?"

அதுவரை பேச்சற்று தரையை வெறித்திருந்த ஆயிஷா வாய் திறந்தார்.

"ரியாஸ்! அவன் ஆரம்பத்துல உன் கலியாணத்தப்ப பார்த்தேனு சொன்னதும் யாரோ நமக்கு தெரிஞ்ச புள்ள நம்மக்கு பழக்கமான புள்ளைனு நெனைச்சேன்..
ஆனா இது எங்கயோ நாங்க வாழ்க்கைலயே பார்த்தில்லாத ஊருல உள்ள புள்ளை. என்னதான் பெரிய படிப்பு படிச்சாலும் தொழுகை, ஓதல், ஒழுக்கம், மார்க்கம் இல்லாட்டி அந்த படிப்புல பிரயோசனமில்ல. உன் கலியாணத்துல நானும் அவளை அவதானிச்சேன்..
அவளும் அவளோட உடுப்பும், தலைய திறந்து போட்டுட்டு
அவளுக்கு மார்க்கம்னா என்னனு தெரியுமோ தெரியாது.." என்றார் தோய்ந்துபோன குரலில்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Donde viven las historias. Descúbrelo ahora