-9-

825 40 0
                                    

ஒலி பெருக்கியில் இலங்கை விமானத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு அதற்குரிய பயணிகளை ஆயத்த நிலையில் இருக்கும அறிவிக்கப்பட்டதும் ரய்யானும் அவனது உடைமைகளை சேகரித்துக்கொண்டு முன்னோக்கி நடக்க

அதே நேரம் இலங்கையில்...
இரவு பதினொரு மணி தாண்டி இருந்தது. அந்த தெருவில் ஒருவீடு மட்டும் பளிச்சென்று பலவண்ண விளக்குகளின் துணையுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

தெருவில் நடந்து செல்லும் குருடனோ செவிடனோ யாராக இருந்தாலும் அது திருமணவீடு என்பதை இலகுவாக கணித்து விடுமளவுக்கு ஒளிக்கேற்ப ஒலிக்கும் குறையில்லாது பேச்சும் கதையும் சிரிப்புமாய் கலகலவென்றிருந்தது.

மணப்பெண் வீடு என்பதால் அன்று 'மெஹெந்தி நைட்' மணப்பெணின் தோழிகளின் பங்களிப்பில் குதூகலமாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

எல்லோரும் கைக்கு மெஹெந்தி போட்டார்களோ இல்லையோ நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து அவர்களின் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் பகிர்ந்துகொண்டு, மணப்பெண்ணை கேலி செய்து, மாப்பிள்ளையை பற்றி கமெண்ட் அடித்து, செல்பிக்கள் எடுத்து அதை ஸ்டேட்டஸ் வைத்து அன்று அங்கே சமுகம்தர முடியாமல் போன தோழிகளை கடுப்பேற்றி என அத்தனையும் செய்தார்கள்.

"ஹேய் நெக்ஸ்ட் யாரு வெட்டிங்னு பூ வீசி பார்ப்போமா? " மணப்பெண் மஹீஷா நினைவூட்டி

"ஆஹ்! கட்டாயமா. அப்பத்தானே அடுத்த ஆடு யாருன்னு தெரியவரும்" என்றாள் புதிதாய் மணமுடித்த மிஷ்ரா

"இந்தா! இந்த வித்தமாடு விலைபேசி வச்சிருக்க மாடெல்லாம் மேபெத்தெட வரென்" ஒருத்தி திருமணமானவர்களையும், திருமணம் பேசி வைத்தவர்களையும் அழைக்க மற்றவர்கள் எல்லாரும் ஒன்றாக குழுமினர்.

"பூ எங்க?!" இன்னொருத்தி வினவ

"இதோ இருக்கே!" மிஷ்ரா ட்ரெஸ்ஸிங் டேபிளை அலங்கரித்துக் கொண்டிருந்த ப்ளவர் வாசிலிருந்து பூங்கொத்தை உருவியெடுத்தாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now