-7-

824 35 0
                                    

அறைக்குள் வந்த ஆயிஷா தாங்க முடியாமல் இஸ்மாயிலின் தோளில் சாய்ந்து அழுதார்.

"அவனுக்கு எதுல குறை வச்சோம்... எல்லாமே பார்த்து பார்த்து சிறப்பா செஞ்சு வைக்கலயா..? ஆனா அவன் இப்படி எங்கட நெஞ்சுல நெருப்ப அள்ளிக் கொட்டுறானே!!"

"உஷ்..!! ஆயிஷா ! என்ன பேச்சு இது.. அவன் வயசு அப்படி! அதுமட்டுமில்ல இத்தனை நாள் வரை அவனோட எல்லா டிசிஷனுக்கும் நாங்க சப்போர்ட் பண்ணியிருக்கம். அந்த ஹோப்ல அவனுக்கு புடிச்ச மாறி ஒருதுணைய தெரிவு செஞ்சிருக்கான். இதுவரை அவன் கேட்டு நாங்க எதையும் மறுத்ததில்ல ஆனால் இதை நீங்க அக்ஸெப்ட் பண்ணாதது அவனால தாங்க முடியல. அதான் கோபப்பட்டு கத்திட்டான்.."

"அதுக்காக! கலியாணம்ன்றது சின்ன விஷியமா அவன் நெனைச்ச மூப்புக்கு முடிவெடுக்க?!
இனி வாழப்போற வாழ்க்கைய அர்த்தம் உள்ளதா மாத்த போறது அவரவருக்கு அமையுற வாழ்க்கை துணைய பொறுத்துதானிருக்கு.."

"விளங்குது ஆயிஷா. ஆனா இப்ப நாங்க எது சொன்னாலும் அவனுக்கு  அவன் மண்டைல ஏறாது. அவன அவன் போக்குல யோசிக்க விடனும்.
அவனோட பிடிவாதம் எங்களுக்ககொன்னும் புதுசில்லையே. கொஞ்சநாள் விட்டு பிடிப்போம். நாங்களும் அவனளவுக்கு அவசரப்பட்டா எப்படி..? பெரியவங்க நாங்க கொஞ்சம் பொறுமையாதான் போகனும்..."

"அவனோட பிடிவாதம் முன்கோவம் தெரிஞ்சதால தானே நானும் அந்த புள்ள வேணாம்னு சொல்றேன்.. ஆனால் அத நீங்க யாரும் விளங்கிக்க மாட்றீங்க. ஒருத்தர் பிடிவாதம் பிடிக்கும்போது அடுத்தவர் விட்டுக் கொடுத்து போகணும், ஒருத்தர் கோவப் பட்டு கத்தும்போது அடுத்தவர் வாய்க்குவாய் பதில் பேசாம பொறுமை காக்க தெரிஞ்சிருக்கனும். பிறகு அவங்க கோவம் தணிஞ்சதும் புரியிர மாதிரி எடுத்து சொல்லனும்...

அப்படி அனுசரித்து வாழ்ந்தாத்தான் அந்த திருமண வாழ்க்கை சந்தோஷம்,பரகத் நிறைஞ்சதா இருக்கும்! அப்படியொரு வாழ்க்கை துணைதான் அவனுக்கு வேணும்னு நான் எதிர்ப்பார்க்குறன்!

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Onde as histórias ganham vida. Descobre agora