-48-

720 41 5
                                    

A1 பிரதான மார்க்கத்தில் அவர்களது வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

எப்போதும் ஹிக்மா அமைதியாக வருவாள். ரய்யான் அவளை கதைக்குள் இழுப்பான். இன்று தலைகீழாக நடந்துகொண்டிருந்தது.

மனதளவில் கணவனிடம் நெருங்கி விட்டதில் ஹிக்மாவின் இயல்பான குணமும், செயற்பாடுகளும் தடையின்றி வெளிப்படத் தொடங்கியிருந்தது.

"நீங்க கொழும்புல படிச்சிங்களா? உங்களுக்கெப்படி அங்க நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க?"

"கொழும்புல வன் இயர் கிட்ட வேர்க் பண்ணேன். அதுல நிறைய பேர் பழக்கம்"

"ஓ.. அங்க ரூம் எடுத்து ஸ்டேய் பண்ணியிருந்திங்களா?"

"ம்ம்..."

"எந்த கம்பெனில வேலை செஞ்சிங்க?"

"ஒரு எக்ஸ்போட் கம்பெனில" என்று மட்டும் சொன்னான்.

"பீச் கிட்டவா?"

"கொஞ்சம் கிட்ட மாதிரிதான்"

"அப்ப டெய்லி பீச்சுக்கு போவிங்களா?"

"டைம் கிடைக்குறப்ப மட்டும்"

"ஈவினிங் டைம்ல கோல்பேஸ் செம்மயா இருக்கும்ல?"

"ம்ம்.."

"எனக்கு பீச்னா ரொம்ப பிடிக்கும்.."

"ஆஹ்"

"நாளைக்கு ஈவினிங் கோல்பேஸ் போவமா?"

"இன்ஷாள்ளாஹ்"

"அஞ்சு மணிக்கு பிறகு போவம். அப்பதான் சூரியன் மறையிறதை புல்லா பார்க்கலாம்"

"ம்ம் போவம்"

ஹிக்மாவின் கேள்விகள் ரய்யானின் பழைய நாட்களை கண்முன்னே கொண்டுவர அந்தப்பேச்சை தவிர்க்கவும் முடியாமல் பதில் சொல்லவும் முடியாமல் திண்டாடினான்.

அவனுக்கும் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்றுதான் இருந்தது. சொல்லிவிட்டு மனசு சஞ்சலமில்லாதபடி மனைவியுடன் வாழவேண்டும்.

ரய்யானின் உற்சாகமற்ற ஒற்றை வார்த்தை பதில்கள் ஹிக்மாவின் சுவாரசியத்தை கெடுத்துவிட கணவனிடமிருந்து கவனத்தை ஜன்னல் பக்கம் திருப்பினாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now