-5-

915 39 0
                                    

ரியாஸ் ரய்யான் இருவருமே மிகவும் கலகலப்பான சுபாவம் உடையவர்கள். இருவரும் ஒரேநேரத்தில் வீட்டில் இருந்தால் ஆயிஷாவை வம்பிழுப்பதுதான் வேலையாக இருக்கும்.

ஆனாலும் குணத்தை பொறுத்தவரை இருவரும் இரு துருவம்தான்.

ரியாஸ் எந்த விடயத்தையும் சுமுகமாக கையாள்பவன். அவனைச்சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான். தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விட தன்னை சார்ந்தவர்களின் உணர்வுகளுக்கு பெரிதும் மதிப்பளிப்பவன். பிடிவாதம், முன்கோபம் என்பது அவன் அகராதியிலே இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழ்பவன்.

ஆனால் ரய்யான் எல்லாவற்றையும் தீவிரமாக கையாளபவன். எதையும் திட்டமிட்டு ஒரு ஒழுங்கு முறையுடன் செயற்படுத்துபவன். ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதில் வெற்றி காணாமல் ஓய மாட்டான். அவன் எடுக்கின்ற முடிவுகளிலும் தீவிரமாக இருப்பான். எனவே பிடிவாதம் என்பது அவனுடன் ஒட்டிப்பிறந்த ஒன்று.

அதே போன்றுதான் முன்கோபமும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள் என பார்க்கமாட்டான். தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவான்.

எதையும் எளிதில் தெரிவு செய்ய மாட்டான். அது சாதாரணமாக உடுத்தும் உடை என்றாலுமே நிறைய ஆராய்ந்துதான் தேர்ந்தெடுப்பான். ஆனால் எப்போதும் அவனது தெரிவுகளில் ஒரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும்.

மாலைவரை ஆயிஷாவிடம் சொல்ல முடியாமல் போகவே முதலில் தந்தையிடம் சொல்ல தீர்மானித்தான்.

அஸ்ர் தொழுகைக்கு செல்ல தந்தை பைக்கில் ஏறும் போதே "வாப்பா தொழுது முடிச்சிட்டு உங்களோட கொஞ்சம் பேசனும்" சொல்லிவிட அவரும் உள்வாங்கிக் கொண்டார்.

தொழுகை முடித்து நேரே வீட்டுக்கு வராமல் அவர்களது ஸ்பைஸ் கார்டனுக்கு வண்டியை செலுத்தினார் இஸ்மாயில்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now