-13-

715 38 4
                                    

ஹிக்மாவின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தது. தந்தை ஹாலித் ஊர் முச்சந்தியில் சிறிய ஹார்ட்வெயார் கடை ஒன்றை நடாத்தி வருகிறார்.

தொழிலில் பாரிய இலாபம் காணா விட்டாலும் நஷ்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. ஆடம்பரமற்ற அவர்களது வாழ்கைக்கு அந்த வருவாய் நன்றாகவே போதுமாக இருந்தது.

ஹிக்மாவும் பல்கலைக்கழக படிப்பு முடிந்ததும் அரச ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தாள். ஆனால் நியமணம் கிடைக்க ஒரு மாதம் ஆகும். அதுவரை வீட்டிலிருந்தபடி தாயாருக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தாள்.

மாப்பிள்ளை வீட்டினருக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. முக்கால்வாசி செலவைக் கூட அவர்களே ஏற்றுக்கொண்டனர். அத்தோடு ஹிக்மாவின் குடும்பமும் ஓரளவு தயார் நிலையில் இருந்ததால் இந்த திடீர் திருமணம் அவர்களுக்கு சிரமத்தை கொடுக்கவில்லை.

நிகாஹ் அன்றே ஹிக்மா கணவன்வீடு செல்வதால் நிகாஹ்வுக்கு முந்தையநாள் மெஹெந்திநைட் எனும் பெயரில் அவளது தோழிகள் வந்து கும்மாளம் அடித்துச்சென்றனர்.

ஹிக்மாவின் உயிர்த்தோழி ருஷ்தாவின் வாய்ச்சொல் படியே அவளின் திருமணம் கைகூடிவிட்டது. ஆனால்  ருஷ்தாவின் உறவினர் ஒருவரின் ஏற்கனவே திட்டமிட்டிருந்த திருமணமும் ஹிக்மாவின் மெஹெந்தியும் ஒரேநாளில் அமைந்ததில் ருஷ்தாவால் மெஹெந்திக்கு சமுகமளிக்க முடியாமல்போக ஹிக்மா மனதில் அது பெருங்குறையாக படிந்தது. கோபமும் தான்.

மறுநாள் பல எதிர்பார்ப்புகளோடும், கனவுகளோடும் விடிந்தாலும் வீட்டைப்பிரிந்து செல்வதை நினைக்கையில் நெஞ்சை அடைத்தது அவளுக்கு.

ரய்யானின் வீட்டை அடையும் போது பொழுதுசாய்ந்து விட்டது.
பிரமாண்டமாய் வீற்றிருந்த வீட்டைப்பார்த்து பிரமித்துப் போனாள் ஹிக்மா. அப்போதுயான் தன் தந்தை எதற்காக அவ்வளவு தயங்கினாரென்பது புரிந்தது. அவளுக்குமே இப்போது மனதில் சிறுதயக்கம் ஒட்டிக்கொண்டது.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now