52

955 46 11
                                    

நேரமோ நண்பகலை நோக்கி நகர மவுண்ட்லவேனியா கடற்கரையோர உணவுவிடுதி ஒன்றில் ரய்யானும், ஹிக்மாவும் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர்.

ஷிரீன் மறைந்த தாயாரை வைத்து கேலி பேசியதை எண்ணி ரய்யான் வருந்திக்கொண்டிருக்க ஹிக்மாவோ முதல்முறை கணவனின் முன்னாள் காதலியை சந்தித்த அதிர்ச்சியில் இருந்தாள்.

பேரர் பழரசம் நிரம்பிய கண்ணாடிக் குவளைகளை மேசையில் வைத்ததும் இருவரும் சிந்தனை கலைந்து நிமிர்ந்தனர்.

குளிர்ந்த பழரசம் உள்ளே இறங்கிய பின்பே உடலிலும், மனதிலும் தேங்கியிருந்த வெப்பம் சற்றுத் தணிந்தது.

ஹிக்மா ஷிரீனைப் பற்றி ரய்யானிடம் எதுவும் கேட்கவுமில்லை. பேசவுமில்லை.

"ஷிரீன் பேசினதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறன்"

"விடுங்க. அவ பேசினதுக்கு நீங்க என்ன செய்வீங்க"

"என்மேல உள்ள கோபத்துல தான் உங்களை அப்படி பேசிட்டா"

"ம்ம்ம்.. அது தெரிஞ்சுது"

"அவதான் ஷிரீன்னு எப்படி கெஸ் பண்ணிங்க?"

"பேசினதை வச்சுத்தான். ஆனா அவங்களை மீட் பண்ணுவேன்னு சத்தியமா நினைச்சே பார்க்கலை"

"சரி மீட் பண்ணினதுல உங்களுக்கு சந்தோஷந்தானே?" வேண்டுமென்று மனைவியை சீண்டிப்பார்க்கவே இந்த கேள்வியை கேட்டான்.

"ஹூம்ம்..." கணவனை முறைத்து பார்த்துவிட்டு

"நீங்க கேட்கிறதைப் பார்த்தா ரொம்பநாள் கழிச்சு அவங்களை பார்த்ததுல உங்களுக்கும் நல்ல சந்தோஷம் போல?"

"இருக்காதா பின்ன? எத்தனை வருஷத்துக்கு பிறகு பார்க்குறன்" மனைவியின் கோபத்தை ரசித்தபடி சீண்டலை தொடர்ந்தான்.

"அதுசரி எனக்கும் அவளுக்குந்தான் பிரச்சினை. நானே பொறுமையாக இருந்தன். முதல்முறை பார்க்குற உங்களுக்கு ஏன் அவ்வளவு கோவம்?"

"அ அது.. அது அவ பேசினது புடிக்கல" ரய்யானை பார்க்காமலே சொன்னாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now