-4-

966 39 0
                                    

நாட்கள் இதமாய் மிதமாய் சென்று கொண்டிருக்க ஒரு நாள் ரய்யானுக்கு அவளிடம் இருந்து Galle face ற்கு வரும்படி குறுஞ்செய்தி வர அவனும் பணி முடிந்ததும் அங்கே சென்றான்.

மாலைமங்கி லேசாக இருள் கவ்வத் தொடங்கி இருந்தது. அலைகளின் ஓசையை மிஞ்சும் அளவுக்கு சனக்கூட்டத்தின் பேச்சு சத்தம் காற்றில் எங்கும் நிறைந்திருந்தது.

ரய்யான் பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வழமையாக அவர்கள் அமரும் இடம்நோக்கி நடந்தான். ரய்யானுக்கு பீச் எனறால் ரொம்ப பிடிக்கும். ஆனால் ஷிரீனுக்கு சனக்கூட்டம், இரைச்சல், உப்புக்காற்று என அவ்வளவாக பிடிக்காது. எப்போதும் ரய்யான்தான் அவளை கட்டாயப்படுத்தி அழைத்து வருவான். ஆனால் இன்று அவளாக அவனை அழைத்திருந்தாள். அவனுக்குள் இனம்புரியாத சந்தோசம் குடிகொண்டது.

செல்லும்போது பூக்கடை அருகே ஏனோ கால்கள் தானாக நிற்க விற்பனையாளரிடம் இரண்டு சிவப்பு ரோஜாக்கள் மட்டும் வாங்கிக் கொண்டான்.

அவர்களது வழக்கமான இடத்தை நெருங்கியதும் அங்கே அழகிய பிங்க் கலர் குர்தியில் ப்ளூ டெனிம் அணிந்து அதற்கு பொருத்தமாய் ஆஷ்கலர் புள்ளி வைத்த ஷோலை அழகாக சுற்றி பின் பண்ணியிருந்தாள் ஷிரீன். அவளது உருவம் அவன் பார்வையில் விழ அவனது உதடுகள் புன்னகை பூத்தன.

அவளை நெருங்கியதும் அவளே திரும்பிவிட ரய்யான் முதலில் ஸலாம் சொன்னான். எப்போதும்போல தேன் குரலில் அவளது பதில் வந்தது.
ஆனால் அவள் முகத்தில் ஏதோ மாற்றத்தை அவனால் உணர முடிந்தது.

எப்போதும் ரய்யானை நேரடியாகப் பார்த்து பேசும் ஷிரீனின் விழிகள் இன்று அவனை தவிர்த்து எல்லா இடத்தையும் பார்த்தன. அந்த இருள் சூழும் வேளையிலும் அவளது கன்னத்தில் இருந்த செம்மையை ரய்யானால் பார்க்க முடிந்தது.

வழமைபோல இருவரும் கடலைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டார்கள். எப்போதும் எதையும் தயக்கமின்றி நேரடியாகப் பேசிவிடும் ஷிரீனுக்கு இன்று ஏனோ வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டன.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now