-8-

800 42 0
                                    

காலையிலே புறப்பட்டு வெளியில் சென்றவன் மாலையாகியும் வீடுதிரும்பவில்லை. ரய்யான் சாப்பிட வராத கவலையில் ஆயிஷாவுக்கும் உணவு இறங்க மறுத்தது.

மனைவியின் கவலை தொய்ந்த முகத்தை பார்க்கமுடியாமல் 'இது எத்தனை காலத்துக்கு தொடருமோ?!' எனக்கலங்கினார் இஸ்மாயில்.

பலதடவை ரய்யானுக்கு அழைத்தும் அவனை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதேபோன்று எவ்வளவு முயற்சித்தும் ஆயிஷாவை சாப்பிட வைக்கவும் முடியவில்லை.

இஸ்மாயில் இப்போது மகனைவிட மனைவியை நினைத்தே அதிகம் கலங்கினார். ரய்யானின் சினம் எப்போது தணியுமென யாராலும் கணிக்கமுடியாது. ஆனால் மகனை நினைத்து கவலைகொண்டு மனைவியின் ஆரோக்கியம் கெட்டுவிடுமோ என்றுபயந்தார்.

இதைஇனி தொடர விடுவது நல்லதில்லை. இன்றே பேசி ரய்யானுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென தீர்மானித்தவராய் அவன் வருகைக்காக காத்திருந்தார்.

மாலை ஆறுமணிக்கும் பிறகே வீட்டுக்கு வந்தான் ரய்யான். அவன் காலணிளை கலட்டி வீட்டுக்குள் நுழையும் மட்டும் பொறுமையுடன் இருந்தார்.

வெளியில் சென்றவர்கள் வீட்டுக்குள் வரும்போது ஸலாம் சொல்லிவிட்டே உள்ளே நுழைய வேண்டுமென்பது சிறுவயதுமுதல் அவர்களது இல்லத்தில் கடைபிடிக்கப்படும் ஒருவழக்கம்.

ஆனால் உள்ளே நுழைந்த ரய்யான் எந்தப்பேச்சுமின்றி அமைதியாக வரவேற்பறையை கடந்துசெல்ல
"ரய்யான்!" என்று இஸ்மாயிலின் குரல் அவனை தடுத்தது.

அவனும் அவரிடம் திரும்பாமலே என்னவென்று வினவ இஸ்மாயிலுக்கோ அவனிடம் கேட்பதற்கு பலகேள்விகள் இருந்தாலும் அத்தனையும் அடக்கிக்கொண்டு
"ஏன் சாப்பிட வீட்டுக்குவரல?" என்றுமட்டும் கேட்டார்.

அவனுடைய பதிலும் அவரது கேள்வியைவிட நிதானமாகவே வந்தது " வெளில கொஞ்சம் வேலை. அதான் ஹோட்டல்லேயே சாப்டேன்.."

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now