8.அத்தியாயம்

427 16 10
                                    

"அப்றம் கனடா வந்ததும் விஷ்ருத் அண்ட் சஞ்சனா என்ன ரிசீவ் பண்ணிக்கிட்டாங்க! இப்போ இங்க இருக்கேன், அவ்ளோதான்ப்பா என் கதை!", என்றபடி காபி ட்ரேயோடு வந்தவள், ஆளுக்கொன்றாக எடுத்துக்கொடுத்தாள் ஒளிர்மதி.

அவளை பார்த்திருந்தனர் விஷ்ருத்-சஞ்சனா, அதிரதன்-ஜான்சி, வினய்-பானுமதி, மீனாட்சி-சுந்தரம் மற்றும் சக்தி (கனடா நாடு அப்றம் இந்த பேரெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே! ஆமாங்க நம்மளோட '💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞' கதையின் கதைமாந்தர்கள் இவங்க. இவங்களும் இந்த கதையில இந்த இடத்துல மட்டும் வருவாங்க😁)

"காபிக்கு சபாஷ்!", என்று தாத்தா சுவைத்து கூற, ஒளிர்மதி சிரித்தாள்.

"ஆக்சுவலி! எங்க வீட்டுலயும் நான் வேலை விஷயமா ஆஸ்திரேலியா போக ஆசைப்பட்டப்போ, யாருமே ஒத்துக்கல ஒளிர்மதி!", என்று உச்சுக்கொட்டினாள் சஞ்சனா.

"வாடி என் ராசாத்தி! என் கல்யாணத்தப்போ போறேன் சொன்னா... விடுவாங்களா?", என்று வினயும்,

"நீ ஒண்ணும் வேலைக்காக போகல சனா டார்லிங்... இந்த விஷ்ருத்த அவாய்ட் பண்ணணுன்னு வேணும்னே வீம்புக்காக போன!", என்று விஷ்ருத்தும் பொங்கினர்.

"அக்கா! இந்த மாமா வேணாம்னு எத்தன தடவ சொன்னேன் கேட்டியா, பாரு உன்ன ஆ ஊனா திட்டிட்டே இருக்காரு, நீ வா, உனக்கு நல்ல மாமாவா நான் பாக்குறேன்!", என சஞ்சனா தோளில் கைப்போட்டு அவளது தாடை பிடித்து சோகமாக பேசினான் சக்தி.

"ஐயோ! இவன் இருக்குறத மறந்துட்டு கத்திட்டேனா, ஜாடிக்கு ஏத்த மூடி, நல்ல அக்கா நல்ல தம்பி!", என புலம்பியவன், "சக்தி குட்டி! மாமா குட் பாய் தான்டா!", என்று சக்தி முடியை இழுத்து மாவாட்ட,

இவர்களது செயலில் அனைவரும் வாய்விட்டே சிரித்துவிட்டனர். ஒளிர்மதி அவர்களை ஆச்சரியமும் ஆர்வமாக கண்டாள்.

"சக்தி! இது மட்டுமா இவரு பண்றாரு! என்ன தூங்க கூட விடமாட்டிக்கிறார்டா உன் மாமா?", என்று சஞ்சனா பாவமாக கூற,

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now