11.அத்தியாயம்

382 15 0
                                    

"தேவா!"

"சொல்லும்மா!", நிமிர்ந்தான் சிம்புத்தேவன்.

"எனக்கு கொஞ்ச நாளா மனசே சரியில்லடா!", என்ற அன்னையை புருவம் சுருக்க கண்டான்.

"ஏன்னு தெரியலடா! உங்கப்பா போக்கே வர வர சரியில்லனு தோணுது!"

"அது தெரிஞ்சது தானே! இதுக்கு ஏன் கவலைப்படுற! வயசாச்சே தவிர அவருக்கு புத்தி மட்டும் வரல.", என்றவனிடம், "அப்பாவ அப்டி சொல்லாதடா!", என அதட்டினார்.

"அம்மா! நான் தெரியாம தான் கேக்குறேன். நீ எவ்ளோ அழகா இருக்கே! எல்லாமே தெரிஞ்ச அறிவாளி நீ! இங்கிலீஷ்ல சொல்வாங்களே, 'பியூட்டி வித் ப்ரேயின்ஸ்', அந்த மாதிரி நீ... ஆனா எப்டி நீ உன்ன விட இருபது வயசு மூத்தவரான அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்ட?

இதுக்கு பேர் தான் காதலா? எனக்கு புரியல.", எப்போதுமே தேவா அவரிடம் கேட்கும் அதே கேள்வி, ஆனால் எப்போதும் புன்னகையோடு சமாளித்துவிடுவார். ஏனோ இன்று பதில் கூற முனைந்தார்.

"உங்கப்பா கெட்டவர் தான். ஆனா அவர் செஞ்ச ஒரு நல்லது என்ன கல்யாணம் பண்ணது!", என்று ரசனையாக கூறினார்.

"வாட்?", என பலமாக சிரித்தவன், "உன்ன கல்யாணம் பண்ணது நல்லதா? மனசாட்சி உள்ள யாராவது ஒரு அழகான பொண்ணோட வாழ்க்கைய அழிக்க நினைப்பாங்களா?", என்று ஏளனமாக கூறினான்.

"போடா! இதனால தான் நான் சொல்றதே இல்ல.", என செல்லமாக கோபித்து சிணுங்கினார்.

"சர்ர்ரிரி! சொல்லு! கேக்குறேன், சிரிக்கமாட்டேன்.", என வாய் மீது விரல் வைத்தான்.

"நான் காலேஜ் போயிட்டிருந்தேன் அப்போ! எங்க வீட்டுல அந்த நேரம் வயசு பொண்ண வீட்டுல வச்சிக்க விரும்பாத எங்கப்பா அவர் ஜாதில தெரிஞ்ச ஒருத்தர காட்டி, கல்யாணம் பண்ண சொன்னாரு. ஆனா எனக்கு அந்தாளு முகத்தை பாத்ததும் பிடிக்கல. ஆர்பாட்டம் பண்ணேன்.", என்றவரிடம்,

"ஏன்ம்மா? உங்கப்பாவுக்கு அவ்ளோ ஜாதி வெறியா?", என்றிட, "ஆமாடா! காசுக்கு கஷ்டப்பட்டாலும் ஜாதி மதம் கௌரவம்னு பீத்தல் விடுவாரு. என்ன கேட்டா, அவரோட அந்த எண்ணம் தான் எங்க குடும்பத்துல பல கஷ்டங்கள தந்துச்சு!", என்று கசப்போடு சிரித்தார்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin