40.அத்தியாயம்

338 16 4
                                    

இத்தனை விஷயமும் வசுமதியின் இறுதி நொடிகளில் அறிந்திருந்தான் சிம்புத்தேவன். உத்தமன் தான் விபத்தின்போதே இறந்தாரே தவிர, வசுமதியின் உயிர் ஒருசதவீதம் பிழைக்கும் தருவாயில் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரது வாழ்க்கை மொத்தத்ணையும் கூறியிருந்தார் வசுமதி.

ஆனால் அவருக்கு தெரியாத விஷயங்களான...
மதிவதனி எங்கே?
கீர்த்தனா உயிரோடு தான் இருக்கிறாளா?
அவளின் பிள்ளைகளோடு மதிவதனி எங்கே சென்றாள்?
ஏன் சென்றாள்?
என்ற கேள்விக்கு உத்தமனிடம் கேட்டாலும் பதில் இல்லை, அதனால் அவருமே நாளாக நாளாக அதை கைவிட்டார். மதிவதனி கீர்த்தனாவின் இறப்பை பற்றிய விடயங்களை வசுமதிக்கு தந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை, அதற்கு காரணம் உத்தமன். மகள் செத்தாலும் கவலைபடாத உத்தமனுக்கு, இப்படி அவரது பேரப்பிள்ளைகள் இருப்பது தெரிந்தால் என்ன செய்வாரோ என்ற எண்ணத்திலே அவர் கூறவில்லை. வசுமதிக்கும் தெரியவில்லை.

முதலமைச்சர் வீட்டுக்குள்ளே அவ்விஷயம் முடிந்து மடிந்து போனது.

ஒளிர்மதி முதலமைச்சர் வீட்டில் வலம்புரி மகளாகிவிட்டாள் என்ற விஷயம் வசுமதி காதை அடைந்தபோது, தனது அண்ணியான மதிவதனியை அவரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதே மனம் பிள்ளையை வலம்புரியிடம் ஒப்படைத்து சென்றதை எண்ணி கலங்கியும் போனது.

பராசக்தி மதிவதனி பற்றி அடிக்கடி கூறும் ஒன்று, "வதனி வித்தியாசமானவ!", என்றதற்கு இப்போது அவளுக்கு காரணம் புரிந்தது.

பராசக்தி மதிவதனி இருந்தபோதாவது பிறந்த வீட்டார் எண்ணம் இருந்தது, அவர்களே சென்ற பிறகு, அத்தோடு முதலமைச்சரின் செயலால் பிறந்தகத்தை தலைமுழுகிவிட்டார் வசுமதி.

மதிவதனி அவரிடம் தந்த பொறுப்புகளை கச்சிதமாக செய்தார், உத்தமனுக்கு மதிவதனி ஊரைவிட்டு சென்றது, அதில் கீர்த்தனா பற்றி ஏதோ உள்ளது என அரசல் புரசலாக தெரியும், அத்தோடு சக்தி பெயரில் வரும் அனைத்து பொறுப்புகளும் மனைவியிடம் இருப்பதும் தெரியும், ஆனால் அதை பற்றிய கவலை அவருக்கில்லை.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now