31.அத்தியாயம்

297 16 2
                                    

விமான நிலையத்தில் குடும்பத்தோடு நின்றிருந்தான் பராசக்தி. இன்னும் இருவருடங்கள் கழித்தே அவனது தரிசனம் கிட்டும். மற்றவர்களை காட்டிலும் அதிக துயரம் மதிவதனிக்கு தான், ஆனால் அவள் வெளிக்காட்டாத முகத்தோடு அவனை கண்டாள். அவளது இந்த நிர்மலமான முகம் எப்போதுமே அவனை ஈர்த்தாலும், அன்று இரவு அவளது இதே முகபாவனை கடுப்பைவிட, கண்ணீரை சிந்த வைத்தது.

வன் வருகையை கண்ட மகமாயி மருமகளிடம் கண்காட்டி போய்விட, "கை கழுவிட்டு வா சக்தி, நான் சாப்பாடு பரிமேறுறேன்.", இதை தான் கூறினாள். ஆனால் அவன் எதிர்பார்த்தது வேறு.

அவன் மாடிக்கு சென்றபோதே, தன் பின்னே வந்து தன்னை கெஞ்சி கொஞ்சி சமாதனம் செய்வாள் என நினைத்தவனுக்கு, அவள் தன் தங்கையோடு கோவில் சென்றதே பெரும் ஏமாற்றத்தை தர, இரவு உணவின் போதும், அவள் தன்னை சாப்பிட அழைக்காதது அவனை இன்னும் பாதித்தது. இப்போது அவள் தன்னை கண்டுக்கொள்ளாது போனது அவனை துயரத்தின் உச்சியில் தள்ள, சாப்பாட்டை வெறித்தவன், தானே அவற்றையெல்லாம் சமையலறையில் வைத்துவிட்டு, அறைக்கு வந்தான். அவனது மனையாள் தூங்கியிருந்தாள், அவன் துயரம் இப்போது உச்சத்தினை கடந்தது. இவ்வளவு வருத்தம் கொள்பவன் யோசிக்க மறந்தது, அவனை. இத்தனைக்கும் காரணமே அவன் தானே.

றுநாள் எப்போதும் போல் மதிவதனி எழுந்து முகம் கழுவி வாசல் தெளிக்க, மறுபுறம் கொல்லை புறத்தை வசுமதி மற்றும் வண்ணமதி சுத்தம் செய்துக்கொண்டிருந்தனர். மகமாயி சமையலறையில் இருந்தார்.

பராசக்தி எழுந்தவன், எப்போதும் போல் தாயிடம் காபியை வாங்கிக்கொண்டு வாசற்படியில் அமர்ந்து மதிவதனியை பார்க்க துவங்க, அவன் பார்வை உணர்ந்தவள், புன்னகையோடு காலை வணக்கம் சொல்ல, அதில் உடனே எழுந்து சென்றுவிட்டவனை கண்டு புருவம் சுருக்கினாலும் வேலையை தொடர்ந்தாள்.

அவள் அலுவலகத்திற்கு தயாராக குளித்து வர, கட்டிலில் தலையணை மீது சாய்வாக சோர்வோடு அமர்ந்திருந்தான்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now