52.அத்தியாயம்

368 14 4
                                    

ஒளிர்மதி கடத்தப்பட்ட கார் சில அடிகளில் நிற்கவே, அன்பன் தனது இயல்புக்கு திரும்பி வேகவேகமாக ஓடி காரை நெருங்க, அதிலிருந்து இறங்கிய சிம்புத்தேவனை கண்டு அதிர்வும் கோபமும் ஒருங்கே தோன்றியது.

"என்னப்பா தம்பி? எப்டி இருக்க?", என சிம்புத்தேவன் புருவம் தூக்கி நக்கலாக கேட்க,

"ப்ச் தள்ளு!", என அவனை விலக்கி, ஒளிர்மதியை காண அவன் ஒருஅடி முன் வைக்க,

"தோடா! என்ன தாண்டி அவள நீ நெருங்கிடுவியா? நீ அடிக்கடி ஒரு விஷயத்த மறந்திடுற அன்பா! நீயும் அவளும் பிரிஞ்சிட்டீங்க. அவளுக்கும் உன் மேல எதுவும் இல்ல...", எனும்போதே,

"அதெல்லாம் எதுக்கு பேசுற? முதல கார் கதவ திற... அவள ஏன்டா இப்டி கஷ்டப்படுத்துற, நீ வேணாம்னு தான போனா... அவள நிம்மதியா விடமாட்டியா?", ஆத்திரமாக கேட்டிருந்தான்.

"எப்டி விடுறது? அவள யாருக்காவது பிடிக்காம போகுமா? எல்லாருமே காதலே ஸ்வீட் விஷயமா சொல்லுவாங்க. ஆனா என்ன பொறுத்தவரை, காதல்ங்கிறது உப்பு மாதிரி... அது சாப்பாட்டுல கூடவோ, குறைச்சலாவோ சேர்த்தாலும், ஒருவேள சேர்க்காம போனாலும்... சுவை இருக்காது. இந்த காதலும் நம்ம வாழ்க்கையில அப்டிதான்.", என ரசனையாக கூறியவனை வெறுத்துப்போய் கண்டான் அன்பன்.

"நீ திருந்திட்டேனு நினைச்சேன்ல என் தப்புதான்!", என்றவனிடம், "ஆஹான்! நீ ஏன் இப்போ இவ்ளோ குதிக்கிற? அதான் நீயும் அவளும் பிரிஞ்சிட்டீங்களே, அப்றம் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது!", சிம்புத்தேவன் சீண்டினான்.

"ஏய்! என்ன சும்மா பிரிஞ்சிட்டீங்க  பிரிஞ்சிட்டீங்கனு! யாருடா பிரிஞ்சா? இப்பவும் அவ என்னோட மதி தான், எப்பவும் அவ மட்டும் தான்.

நாங்களா பிரியலயே! சூழ்நிலை எங்கள பிரிச்சிடுச்சு. ஆனா இத்தன வருஷத்துல அவளும் சரி நானும் சரி... எவ்ளோ அடிச்சிக்கிட்டாலும், திட்டிக்கிட்டாலும்... எனக்கு ஒன்னுனா துடிக்கிற முதல் ஆள் அவ தான், அவளுக்கு ஒன்னுனா என்னாலயும் தாங்க முடியாது.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now