62.அத்தியாயம்

923 22 19
                                    

ல்லூரி முடிந்து கிளம்பவென பார்க்கிங் வந்தான் அமுதன். சற்று தொலைவில் ஸ்டார் ஆகாத வண்டியை பார்த்தபடி அறிவுமதி நிற்கவும், அவளருகே பைக் எடுத்தபடி வந்தவன், "என்னாச்சு?", என்றான்.

அவள் வண்டி எப்போதும் போல் இயக்க முடியவில்லை என விஷயத்தை கூற, "அப்போ வா நானே ட்ராப் பண்றேன்!", என்றதும் ஒருநொடி அவள் முகம் விகாசிக்க, ஆனால் உடனே ஒத்துக்கொண்டால் தனது தன்மானம் என்னாவது என வீம்புக்கென ஆர்வமில்லாதது போல், "ஏன் அப்பதான் கல்யாணம் பண்ணுவீங்களா?", என்றாள்.

"இல்லைனாலும் கட்டிப்பேன்! ஒரு உதவிக்காக கேட்டேன்.", என்றிட,

அவன் பேசியதில் புன்னகைத்தவள் அவன் வண்டியை நெருங்கிய வந்த சமயம், "இரு இரு இரு! இங்க வேணாம், காலேஜ் தெரு முக்குல வெயிட் பண்றேன் வா.", என்றதும் முதலிலேயே வாய் மூடி ஏறி இருக்க வேண்டுமோ என தன்னை நொந்தாலும், அவன் கூறுவதால் அமைதியாக தலையாட்டினாள்.

கிளம்புவதற்கு வண்டியை முறுக்கியவன், மீண்டும் நிறுத்தி அவள் புறமாக திரும்பி, "அது சரி வராது அறிவாளி! இங்கயே வண்டிய நிறுத்திட்டா, எப்டி சரி பண்றது. அதனால நீ என்ன பண்ற? அதே காலேஜ் முக்குல இருக்குற மெக்கானிக் ஷாப்ல வண்டிய விடு, அதுவரைக்கும் நான் அங்க இருக்குற காபி ஷாப்ல வெயிட் பண்றேன், பத்திரமா வந்திடு.", என கூறிச்செல்பவனை வெட்டவா குத்தவா என பார்த்து வைத்தாலும், அவன் தன் நலனுக்காக தானே கூறிகிறான் என அவன் சொன்னது போலவே செய்தாள்.

ஒருவழியாக வண்டியை பழுது பார்க்க மெக்கனிக் கடையில் ஒப்படைத்தவள், காபி ஷாப் உள்ளே வர, அவளுக்கு கை உயரத்தி அமுதன் அழைக்க, மேஜையருகே வந்து இருக்கையில் அமர்ந்தாள்.

அமுதன் எப்போதும்விட இன்று கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியோடு இருப்பதை காலையிலிருந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறாள், என்ன விஷயம் என அவளுக்கும் தெரியும். ஒளிர்மதி வருவதால் வந்த சந்தோஷம் அது.

"ஏன் மாமா உங்களுக்கு ஒளிரக்காவ ரொம்ப பிடிக்குது?", அக்கேள்வியில் அவளது சிறுப்பிள்ளை தனமான பொறாமை இல்லை, மாறாக ஆர்வம் இருந்தது.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now