12.அத்தியாயம்

363 18 4
                                    

மகமாயி பாட்டி, மாட்டிற்கு தீவனம் வைத்துவிட்டு சோர்வாக திண்ணையில் அமர்ந்தார். ஒருவாய் காபி குடித்தால் நன்றாக இருக்குமென தோன்றியது.

"அறிவு! அன்பு!", என பாட்டி கூப்பிட, இரு சகோதரிகளும் அடித்து பிடித்து வந்தனர்.

"போயி ஒரு காபி போட்டு தாங்கடி!", என்றிட, அன்புமதி சமையல் கட்டிற்கு சென்று சில நிமிடங்கள் காபிப்போட்டு பாட்டிக்கு தந்துவிட்டு மீண்டும் அறைக்கு ஓடிவிட்டாள்.

ஒளிர்மதி இருந்தபோது பாட்டி சகட்டு மேனிக்கு திட்டினாலும் கூட, அவரிடம் வளவளவென பேசாவிட்டாலும், அவரோடு கொல்லைப்புறத்தில் அமர்ந்து சற்று நேரம் பேசுவாள். இப்போது வீடே ஊமையாகியது போல் தோன்றியது அவருக்கு.

"றிவு இந்த டிரஸ் எப்டி?", என்று அன்பு கேட்க,

"ஐய்ய! இது வேணாம்டி, ஏற்கனவே போட்டது. வேறு போடு."

"ம்ம் இது!"

"ச்சீ!"

"ஏன்டி எதுக்கேட்டாலும் குறை சொல்ற?", என சலித்தவள், அங்கிருந்த ஒளிர்மதி பீரோவை திறந்தாள்.

"அக்கா பீரோல என்ன தேடுறடி?", அறிவுமதி புரியாமல் கேட்க,

"வேறென்ன? டிரஸ் தான்! அக்கா கொஞ்சம் டிரஸ் இங்க தான் வச்சிட்டு போனா... அதுல எதாவது எனக்கு செட்டாகுதான்னு பாக்குறேன்!", என துலவியவள் கையில் சிக்கியது சந்தன நிற புல் ப்ராக் ஒன்று. அழகான வேலைபாடுகளோடு, கண்களை பறித்தது. அதை கண்டு அறிவுமதி அதிர்ந்துவிட்டாள்.

"ஏய்! இது வேணாம், வேற போட்டுக்கோடி!", என உடையை பிடுங்கி பீரோவிலே வைத்தாள்.

"ஏன் ஏன் ஏன்? எனக்கு இது தான் வேணும்! தள்ளு!", என கண்ணாடி முன் நின்று தன்மீது வைத்து அழகு பார்த்தாள்.

"லூசு! இது அன்பன் மாமா, ஒளிர் அக்காவுக்காக வாங்கிக்கொடுத்த பர்த்டே டிரஸ். அத எப்டி நீ போடுவ?", என அதட்டினாள்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Kde žijí příběhy. Začni objevovat