18.அத்தியாயம்

322 16 6
                                    

ஒளிர்மதி தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தாள். மெத்தென்று இருந்த அந்த பஞ்சனை அவளை தன்னுள் இன்னும் உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. மெதுவாக எழுந்தவள் அவ்வறையிலிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்றாள்.

நேற்று அவள் கட்டியிருந்த அதே சேலை, அத்தோடு புதிதாக மின்னியது 'அவன்' கட்டிய தாலி.

தன்னை ஆளுயரக்கண்ணாடியில் பார்த்தவளுக்கு நேற்றைய தினம் கண்முன் வந்தது.

_ _ _ _ _

அன்பன் தனது கடையின் முக்கியமான ஆட்களை வரசொல்லியிருந்தான் அவர்கள் தாத்தாவிற்கு மிகுந்த பரிச்சயமானவர்கள். அமுதன் தனது திருமணம் பற்றி கல்லூரியில் யாரிடமும் சொல்லவில்லை, அதற்கு சில காரணங்கள் உண்டு. ஒளிர்மதி தனது கனடா நண்பர்களை அழைத்திருந்தாள், அவர்களோ இன்னும் வந்தபாடில்லை.

அன்பன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒளிர்மதி தனது குடும்பத்தினரது மகிழ்ச்சியை கண்டபடியே இறுதியாக, அங்கே கேமரா மேன் பக்கத்தில், பட்டு வேட்டி சட்டை சகிதம் மாப்பிள்ளைகளையோடு நின்று அவளை கண்வெட்டாமல் பார்த்திருந்த அமுதனை கண்டாள். அவனை கண்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, முகத்தில் கவலையோடு கண்டாள். அவள் முகம் சோகமாவதை உணர்ந்தவன், மேடை மீதேறி அவளருகே வந்து குனிந்து அமர்ந்தான்.

"பேபி! கடவுள் நம்பிக்கை இருக்குல நல்லா வேண்டிக்கோ!"

"என்னன்னு?"

"இந்த கல்யாணம் நிக்கனும்னு!"

"வேணாம்டா! இந்த கல்யாணம் நிக்கிறதுக்கு, நடக்கலாம்! பாரு, நம்ம பேமிலில எல்லாரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க."

"பைத்தியமே! இந்த பேமாலிக்காக நீ ரொம்ப பொங்காத! உனக்கு நிச்சயம் நல்லதுதான் நடக்கும்! ஆனா எது நடக்குதோ ஏத்துக்கோ பேபி.", என கன்னம் தட்டி தலை வருடி எழுந்தான். அவன் கூறியது புரியவில்லை, ஆனால் உள்ளுக்குள் ஏதோ ஒரு புது நம்பிக்கை தோன்றியது. அமுதனை நோக்கி அழகாக புன்னகைத்தாள், அவனுமே அர்த்தமாக புன்னகையோடு மேடையிலிருந்து கீழிறங்கினான். இருவரது கண்களிலுமே தந்தை-மகள் உறவினை போன்ற தூய்மையான அன்பின் வெளிப்பாடு தெரிந்தது.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now