50.அத்தியாயம்

362 14 8
                                    

மருத்துவமனையில்...

கிள்ளிவளவன் உயிர் பிழைத்துவிட, அமுதன் மற்றும் சிம்புத்தேவன் அவர்களது காவல் அதிகாரிகளோடு தக்க விசாரணைகளை துவங்கியபின்னர், அவருக்கான தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதை குறிப்பிட்டு, அவர் குணமடையும் வரை மருத்துவமனையில் பலத்த காவலோடு கண்காணிக்கப்படுவார் என்றுவிட்டு சென்றனர்.

இது எதிர்பார்த்தது தான் என்பது போல் அனைவருமே இருந்தனர். ஆனால் கிள்ளிவளவனால் அதை தாங்க முடியவில்லை. விஷயமறிந்து மனைவி, பிள்ளைகள், சமூகம் என அத்தனை பேரையும் எதிர்க்கொள்ளும் தைரியமற்றவராகியவர், தனது மரணத்தை தனது கையாலே நிகழ்த்திக்கொண்டார் காலி சிரஞ்ச் மூலம்.

மாரடைப்பு என அவரது கேஸ் முடிக்கப்பட, அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தவறான செயல்கள் மூலமாக வந்த பணத்தை தானே முன் வந்து வழங்கியிருந்தனர் அன்பன் மற்றும் அமுதன்.

வண்ணமதியின் வெளிதோற்றத்தில் இறுக்கம் காணப்பட்டாலும், இயல்பிலேயே பயந்த சுபாவமானவர், மனதுள் நொறுங்கியிருந்தார்.

கணவனிழந்து எப்படி வாழ்வது, பிள்ளைகளின் வாழ்வு என துவண்ட போது, அவரை தேற்றியது மகமாயி தான்!

ஒருவாரம் கழித்து கண்விழித்த ஒளிர்மதியை கண்டு, அனைவருமே ஒவ்வொரு மனநிலையில் இருக்க, அமுதன் தான் அவளை முதன்முதலில் போய் கண்டான்.

தாமஸ் மதிவதனியிடம் அவளது உடல்நிலை பற்றி விவரிக்க, உள்ளே அவளருகே வந்து அவளது தலை வருடினான் அமுதன்.

"பயமுறுத்திடல? மயக்கம் வந்தா உடனே எழுந்திடனும், அது தான நம்ம டீல். இது என்ன ஒருவாரம்?", என்றதும் தாங்கள் மயங்கியது போல் நாடகமாடியதெல்லாம் இருவருக்கும் கண்முன்னே விரிய, நீண்ட நாட்கள் கழித்து சிரித்துவிட்டனர்.

சிரிப்பினூடே, அவளது நெற்றி முட்டி உச்சியில் முத்தமிட்டவன், "என் பேபி இதுக்கு மேல சந்தோஷமா மட்டும் தான் இருக்கனும்!", என விலக, அவள் கண்சிமிட்டி புன்னகைத்தாலும், மீசை மழிக்கப்பட்ட அவனது முகத்தை வைத்தே, அவளுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now