37.அத்தியாயம்

300 17 6
                                    

அனைவரது வாழ்விலும் வசந்தமே...

உத்தமன்-வசுமதி தம்பிதிக்கு சிம்புத்தேவன் பிறந்த அடுத்த இருமாதங்களிலே, கிள்ளிவளவன்-வண்ணமதி தம்பதிக்கு பிறந்திருந்தான் இசையன்பன்.

இசையன்பனை குடும்பமே கொண்டாடி மகிழ, பராசக்தி மற்றும் மதிவதனியும் குழந்தையை கண்டுவிட்டு வந்தனர்.

உத்தமன் மற்றும் பராசக்திக்கு பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பரஸ்பரமான விசாரிப்புகள் உண்டு, பராசக்தி மடியில் சிம்புத்தேவனுக்கு  மொட்டை அடித்த அதே சமயம், வலம்புரி மடியிலிருந்த இசையன்பனுக்கு மொட்டை அடித்து காது குத்தினர்.

_ _ _ _ _

மதிவதனிக்கு பிடிக்குமென்று பால்கனியில் ஊஞ்சல் போட்டிருந்தான் பராசக்தி. மாலை வேளையை சிலாகித்தபடி அதில் அமர்ந்திருந்தாள். ஏனோ வெளி உலகை வேடிக்கை பார்க்கும்போது, மனதிற்கு தற்காலிக இலைபாறுதல் ஆகுகிறது. எப்போதும் விட இன்று அவளது முகம் பிரகாசித்தது.

அப்போது அவளது தோளை தீண்டிய கரமானது அவளின் சக்தியினுடையது எனப்புரிய, அவள் சிரிப்போடு, "சக்தி!", என அவனை முன்னே இழுக்க, அவனோ அசராமல் அவள் மடியில் உட்கார்ந்துவிட்டான்.

"நீ என்ன சின்ன பிள்ளையா எந்திரிடா!", என முதுகை தள்ளினாள்.

"சின்ன பிள்ளை இல்லடி, உன் புருஷன்!", என கன்னத்தை கிள்ளியவன், "நீ தாங்குற பாரம் தான இருக்கேன்? உட்கார கூடாதா?", என்று அவனே எழுந்துக்கொண்டு, அவளது கால்மாட்டில் அமர்ந்து காலிற்கு சொடுக்கெடுக்க துவங்கினான்.

"நான் ஆயுளுக்கும் உன்ன தாங்கிப்பேன், உடலால மட்டுமில்ல, மனசாலயும்...", என முறுவலோடு கூறியவள், "ஆனா இனிமே கொஞ்ச மாசம் முடியாதுப்பா!", என்றாள் சிரிப்பை அடக்கி.

"தெரியும்!", என கண்ணடித்தான்.

அவள் திகைத்துப்பின், "சக்தி... நான் சொல்ல வரது... அது... நீ... உனக்கு எப்டி தெரியும்?", அவள் தடுமாறவும், "எந்திரி!" என அவளமர்ந்த இடத்தில் இவன் அமர்ந்து, அவளை மாடியில் அமர வைத்தவன், "எப்டினா... நான் டாக்டர்!", என அவளது கையின் மணிக்கட்டில் முத்த வைக்க, அதில் சிலிர்த்து சிரித்தவள், "எப்போ தெரியும்?", அவள் ஆர்வமும் ஆசையுமாக கேட்க,

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now