56.அத்தியாயம்

339 16 4
                                    

இங்கு மற்றவர்கள் உறங்க சென்றுவிடவே அன்பனை காணவென எவரும் அறியாமல் அவன் இல்லம் வந்துவிட்டாள் வெண்மதி. ஏற்கனவே வந்திருந்ததால் முகவரி அறிந்திருக்க, இன்று ஒரு முடிவு தெரிந்தாக வேண்டுமென வந்துவிட்டாள்.

அன்பனை வெண்மதி சந்தித்ததெல்லாம் அவனது கஷ்டகாலத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே அமுதனோடு வேலை செய்ய துவங்கியபோது, அவன் மூலமாக அவனை அறிந்திருந்தாள். அமுதன் இயல்பாக ஒளிர்மதி, அன்பன், மற்றும் தங்கள் மூவரது நட்பு, அன்பனின் பொறுப்புணர்ச்சி என தோழமையோடு கூறிய யாவும், அவள் மனதில் அன்பன் மீது காரணமற்ற ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டது.

நாளடைவில் அது மாறிவிடலாம் என நினைத்தவளுக்கு, அவன் நினைவு ஆழமாகியது. அதை வெளிப்படுத்த அவளுக்கு தயக்கம் மற்றும் பயம். வெண்மதி உலகை சுற்றியவள், அவள் பார்க்காத பழகிடாத மக்களே இல்லை. அனுபவம் நிறைந்த வாழ்க்கை அவளுடையது. அப்படியானவளுக்கு தனது மனதில் உருமில்லாமல் முளைத்த காதலை வெளிப்படுத்த தயக்கம்.

இவ்வாறு நாட்கள் கடந்தபோது தான் ஒளிர்மதி-அன்பன் திருமணம் பற்றி அமுதன் கூற, தனது ஒருதலை காதலை மறைத்துவிட்டாலும், அமுதன் திருமணத்திற்கு வர அழைத்தும் வராமல் இருந்த வெண்மதிக்கு அழைத்தான்.

"ஹே சீனியர்... உன்ன கல்யாணத்துக்கு வர சொன்னேன்ல எங்க இருக்க?", உரிமையான அதட்டலோடு கேட்டவனிடம்,

"உடம்பு சரியில்ல!", என்றாள் அமைதியாக.

"பொய்!", அவள் அமைதியாக இருக்கவே, "எனி ப்ராப்ளம்?", என்றான்.

"யாஹ்!", என பெருமூச்சுவிட்டவள், "பர்சனல்!", என்றிட, அவன் அதற்கு மேல் அவளது அந்தரங்கம் பற்றி கேள்வி கேட்காது வைத்துவிட்டான்.

ஒளிர்மதி-சிம்புத்தேவன் திருமணம் முடிந்த நிலையில், அதை ஏற்க முடியாமல் குடித்த அன்பன் சாலையில் விழுந்து கிடக்கவே, அதிர்ந்துப்போனவள், கேப் மூலமாக அன்பனோடு அவன் இல்லம் வந்தாள்.

அன்பனை காணமென வண்ணமதி கூறியதால் அவனை தேடி புறப்பட இருந்த அமுதன் வீட்டு வாயிலிலை காணவும், "என்னயவே பாக்காம, உங்கண்ணாவ தூக்கு!", என்று கோபமாக வெண்மதி குரல் கொடுக்க, அப்போது தான் காரினுள் மயங்கி இருந்த அன்பனை கண்டான். மது வாடையின் நெடி தலையை வலிக்க செய்தது.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now