26.அத்தியாயம்

328 13 4
                                    

"பரசு! எப்டி இருக்க?", ரயில் நிலையத்தில் நின்றிருந்தனர் பராசக்தி மற்றும் தாமஸ்.

"எனக்கென்னடா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.", என்றவன், "பம்பாய்ல மக்கள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லல. சுறுசுறுப்பான இடம்.", என்றிட,

"அது என்னவோ உண்மை தான். ஆமா கேம்ப் போடுவியே அதெல்லாம் எப்டி போகுது?", என தாமஸ் கேட்டபோது இருவரும் டாக்சியில் ஏறியிருந்தனர்.

"கேம்ப் ஒருபக்கம் நடக்குது தான்! ஆனா காசு பாக்க முடியாதுல! அதான் நீ போன் பண்ணி வர சொன்னதும், உடனே வந்துட்டேன்.", என்றதிலே நண்பனுக்கு இப்போது ஒரு வேலை தேவை எனப்புரிந்த தாமஸ், "நீ ஏற்கனவே வொர்க் பண்ண ஹாஸ்பிட்டல் என்னாச்சுடா?", என்றதும், விரக்தியாக சிரித்தவன், "நான் நேர்மையான ஆளு, கண்ணுக்கு எதிர்க்க தப்பு நடக்கும்போது தட்டி கேட்காம இருக்க முடியாதே! மருத்துவம் பண்றோம்ங்கிற பேர்ல, கொள்ளை அடிக்கிற கூட்டத்துல என்னால இருக்க முடியல, வேலைய விட்டுட்டேன்.", என்றான் பராசக்தி.

"ஊரே ஒட்டுத்துணியில்லாம திரியும்போது, நாம கோமணம் கட்டியிருந்தா, நாம தான் பைத்தியம்.

அதுமாதிரி தான்டா! எல்லா இடத்துலயுமே!

எங்க வணக்கம் போடனுமோ, சின்னவனோ பெரியவனோ ஒரு வணக்கத்த வீசிடனும். எங்க நம்மள அடக்க முயற்சி பண்றாங்களோ, எட்டி உதைச்சிடனும்.", என தாமஸ் கூற, பராசக்தி சிரித்தான்.

"உனக்கு வேலை, பம்பாய் வாழ்க்கை எப்டிடா போகுது?"

"எனக்கென்ன பரசு, பிடிச்ச வேலை, நல்ல வீடு! ஆனா அம்மாதான் கல்யாணம் அது இதுன்னு டார்ச்சர். மத்தபடி ஓகே!", என சிரித்தான்.

"அப்போ ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணுடா! அவங்களுக்கு நீ ஒரே பையன்! அவங்களோட எதிர்பார்ப்புகள் தப்பில்லையே!"

"தப்பில்லைதான்! ஆனாலும் கொஞ்ச நாள் போகட்டும்!", என முடித்துவிட்டான்.

தாமஸ் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே விண்ணப்பித்து, பராசக்திக்கு வேலையும் கிடைத்துவிட்டது.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Wo Geschichten leben. Entdecke jetzt