59.அத்தியாயம்

409 15 2
                                    

ல்யாண வீட்டிற்கு உரித்தான கலையோடு காட்சியளித்தது முதலமைச்சர் வீடு! அத்தனை மக்களையும் தனக்குள் இருக்கும் கர்வத்தோடு ஜோலித்தது.

வாழைமரம் வாசலில் காட்டப்பட்டிருக்க, சகோகரிகளின் பொன் கைகளால் வரையப்பட்ட அழகிய பெரிய வண்ணக்கோலாம், காண்பவரை கவர்ந்தது.

விருந்தினர்கள் என தாமஸ் குடும்பம், கடை ஊழியர்கள் சிலர் அவ்வளவே!

வண்ணமதி, மதிவதனி, சங்கீதா ஆளுக்கொரு வேலையில் பம்பரமாக சூழல, சமையல் வேலைகள் பந்தி சரிபார்த்தல் யாவும் அன்பன் வாசம்.

வந்தவர்களை வரவேற்று உபசரித்தனர் அன்புமதி மற்றும் அறிவுமதி.

அறைக்குள் வெண்மதிக்கு புடவை கட்ட உதவியாக ஒளிர்மதி நிற்க, மற்றொரு அறையில் வெற்றிச்செல்வனுக்கு வேட்டி கட்ட போராடிக்கொண்டிருந்தான் சிம்புத்தேவனும்.

"கனடா போனா வேஷ்டி கட்டி பழக மாட்டியா?", எனும்போதே அமுதன் அங்கு வந்தான். வந்தவனோடு வேட்டி கட்டிவிடுபவனையும் பயங்கரமாக முறைத்தான்.

குளித்து புதிதாக எடுத்த ஷர்ட் பேண்ட் அணிந்து தன் பாட்டிற்கு இருந்தவனை, மகமாயியிடம் கோர்த்துவிட்டு அவர் ஏற்கனவே அவனுக்கு எடுத்துக்கொடுத்த வேட்டியை கட்டுமாறு பணித்துவிட்டார்.

"சிவனேன்னு இருந்தவன லோல் பட வைக்கிறீங்களா?", என வெற்றிச்செல்வன் முறைக்க,

"பாரம்பரியம், கலாச்சாரம்டா இது!", என ஒருவழியாக சிம்புத்தேவன் கட்டி முடிக்க,

"மாமா! ஒரு ஆணோட ஆடைகளிலோ பெண்ணோட ஆடைகளிலோ பாரம்பரியம் கலாசாரம் இல்ல! அது அவங்க வாழ்ற வாழ்க்கையில இருக்கு.", என வெற்றிச்செல்வன் துவங்க,

"யப்பா சாமி! பேஷனா இப்ப வந்த ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிக்கு இப்டி சலிச்சு பிரசங்கம் வேற செய்யற, உன்ன தாத்தா கட்டுற மாதிரியான வேட்டிய கட்ட சொல்லிருந்தா இன்னும் என்னலாம் பேசுவ!", என அமுதன் சலித்துக்கொள்ள, சிம்புத்தேவன் சிரிக்க, வெற்றிச்செல்வன் இளித்தான்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now