35.அத்தியாயம்

320 17 10
                                    

வசுமதி மற்றும் உத்தமன் பற்றி ஏற்கனவே அறிந்தும் அதை மதிவதனி மறைத்தது கோபத்தை வாரி இறைத்தாலும், இவள் வசுமதி நலனுக்காக மறைத்தாள் என்றாலும் தவெறெனும் பட்சத்தில், இத்தனையும் நடந்தது அவளால் மட்டுமில்லையே...

உண்மையை உரைக்காத வசுமதி, உண்மையை மறைத்த மதிவதனி, கணவரது செயல் தவறெனும்போதும் மறுக்காத மகமாயி, இத்தனைக்கும் தலையாய காரணம் அவனது தந்தை முதலமைச்சர். இவ்வளவும் நடக்க காரணமே அவர் தான். இதில் மதிவதனியை குற்றம் சாட்டுவது அபாண்டம், அத்தோடு இதில் மற்றவர்களை காட்டிலும் அதிகளவு பாதிக்கப்பட்டது மதிவதனி மற்றும் வண்ணமதியே... நினைக்கவே நெஞ்சமெல்லாம் வெந்து எரிந்தது.

அதன் பிறகு ஒருவாறு இருவருமே சமாதனம் ஆகிவிட்டனர்.

வசுமதி திருமணத்தின் பிறகு, பிறந்த வீட்டார் உறவு, வேரோடு அறுந்துப்போனது. ஆனாலும் அவளை விடாத இருவர் பராசக்தி மற்றும் மதிவதனி.

உண்மை தெரிந்த மறுநாளே, உத்தமன் வீட்டிற்கு, மதிவதனியோடு வந்தான் பராசக்தி. அவர்களது வருகையில் ஆனந்த அதிர்வோடு ஓடிவந்தவள், இருவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டாள்.

"அனாதையா விட்டுட்டீங்களோன்னு நினைச்சேன்! என்ன மறந்திடுவீங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்! இப்போ தான் என் ஞாபகம் வந்துச்சா?", என மதிவதனியை விலக்கி கேட்டவள், அண்ணன் தோளிலே அடித்தாள்.

"பயப்படுற மூஞ்சியா இது?", என சிரித்தவன், "உள்ள கூப்பிட மாட்டியா? இல்ல உன் புருஷன் எங்களாலாம் பாத்தா, பேசிய விரட்டிவிடுனு சொல்லிட்டாரா?", என்றதும் தான் அவர்களை அழைக்காமல் இருப்பதே புரிய,

"ரெண்டுபேரும் உள்ள வாங்க!", என்றவள், "பரசு அண்ணா! என் வீட்டுக்காரர் மரியாதை தெரிஞ்சவரு, எதிரியாவே இருந்தாலும் விரட்டி அடிக்கமாட்டாரு!", என பேசியபடியே நடந்தவள், வேலையாளிடம் பழச்சாறை எடுத்து வரக்கூறி, உத்தமனையும் அழைத்து வந்தாள்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now