தனி அழகு

41 15 4
                                    

"ஒளிரும் போது தீபம்  அழகு!
விரியும் போது மலர்  அழகு!

நீந்தும் போது மீன் அழகு!
ஏந்தும் போது விரல் அழகு!

ஈர்க்கும் போது விழி அழகு!
பார்க்கும் போது பசுமை  அழகு!

சுரக்கும் போது ஊற்று அழகு!
மறக்கும் போது பகை அழகு!

கேட்கும் போது இசை அழகு!
மட்கும் போது உரம்  அழகு!

கோர்க்கும் போது மணி அழகு!
சேர்க்கும் போது மாலை அழகு!

உழைக்கும்  போது வியர்வை  அழகு!
தழைக்கும்  போது வாழை  அழகு!

வடிக்கும் போது சிலை அழகு!
துடிக்கும் போது இதயம் அழகு!

ரசிக்கும் போது இயற்கை அழகு!
பசிக்கும்  போது உணவு  அழகு!

காயும்  போது சருகு  அழகு!
சாயும்  போது தோள் அழகு!

சிந்திக்கும் போது சிந்தனை அழகு!
சந்திக்கும் போது சோதனை அழகு!

தோன்றும் போது வானவில் அழகு!
ஊன்றும் போது கோல் அழகு!

நினைக்கும் போது நினைவுகள் அழகு!
புன்னகைக்கும் போது இதழ்கள் அழகு!

சேர்ந்திருக்கும் போது திருமணம் அழகு!
காத்திருக்கும் போது காதல் அழகு!

எளியோர் கற்கும்போது தமிழ் அழகு!
பெற்றோர் ஏற்கும்போது காதல் அழகு!

சோதிக்கும் போது இறைவன் அழகு!
சாதிக்கும்  போது பெண் அழகு!  "

                        -  தர்ஷினிசிதம்பரம்
         

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Donde viven las historias. Descúbrelo ahora