உன்னை போல் ஒருவன்

187 14 6
                  

எனக்கானவனை பற்றி
யோசிக்கும் நேரங்களில்
உன்னை போல் ஒருவனை தான்
எதிர்ப்பார்க்கிறது நெஞ்சம்....

உன்னை போல் எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல்
என் மீது அன்பு செலுத்த...

உன்னை போல்
எனக்கு அரணாய் இருந்து
என்னை காக்க...

உன்னை போல்
எனக்காய் மட்டுமே
என்னை நேசிக்க...

உன்னை போல்
என்றும் என் மேல்
வெறுப்புணர்வு
வராமல் இருக்க....

உன்னை போல்
என்றும் என்னை
குழந்தையாய் பாவிக்க...

உன்னை போல்
என்றும் அழகானவளாய்
அவன் கண்ணுக்கும்
நான் தோன்ற...

அவனின் ஒரு செயலிலேனும்
உன்னை நான் உணர...

உன்னை போல் ஒருவனை
எனக்கானவனாய்
தேர்வு செய்வாயா
என் அன்பான அப்பா......

-- நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now