என் நினைவில் உன் நினைவு

72 9 4
                  

நான் கண்மூடி கைகூப்பி கடவுளை
வணங்கிடும் வேளையில்
அருகில் அருவுருவமாய் நீ
என் நினைவில்.....

தொலைதூரப் பயணங்களில்
நான் உன் தோள் சாயந்திட
அருகினில் நீ
என் நினைவில்.....

நான் சமைக்கும் வேளைகளில்
அதை ரசித்து ருசித்து
உண்ணும் நீ
என் நினைவில்....

பேருந்தில் பயணிக்கையில்
உன் விருப்பப் பாடலை
தலையணி ஒலிவாங்கியில்
ஒன்றாய் இணைந்து
ரசிக்கும் நாம்
என் நினைவில்.....

நான் எனக்காய்
உடை வாங்கும் நேரம்
எனக்காய் தேர்வு செய்யும் நீ
என் நினைவில்....

நினைவால் என்னை தொடரும்
அருவுருவத்திற்கு
உயிர் கொடுத்து
என்னுடன் இணைப்பாயா
என் இறைவா!!!!!

-- நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now