என் யாவுமாய் வருவாயா???

58 5 1
                  

மென் காற்றாய்
என்னை சூழ்ந்தவனே
என் சுவாச சந்திரனே !!!

வானமாய் என்னுள்
வியாபித்திருப்பவனே
என் மதிநிலவனே !!!

பனிதுளியின் நீராய்
என்னை குளிர்விப்பவனே
என் கடலரசனே!!!!

நிலமாய் என் உணர்வை
தாங்குபவனே
என் நிலவேந்தனே!!!!

செந்தணலாய்
என்னுள் பரவி
குளிருக்கு இதமளிப்பவனே
தன்னொளியானே!!!!

ஐம்பெரும் பூதமாய்
என்னில் உன்னை
உணரச்செய்தவனே
என் மானசீக மன்னவனே!!!!

இந்நிழல் உணர்வை
நிஜமான நினைவாய் மாற்றி
வருவாயா என் வாழ்வில்!!!!

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now