காதல் தவம்

162 6 1
                                    

கண்ணா கார்முகில் வண்ணா!!!!

கண்ணால் காணாது இருந்தாலும் மெய் அன்பினால் காதல் கொள்வராமே கடவுளிடத்தில்???

ஆண்டாளும் மீராவும்
சாட்சியாமே அக்காணாத காதலுக்கு...

என் காதல் என்னவனுக்கேயென யாரென்றே தெரியாதவனுக்காய் காதலை சுமந்து காத்து கொண்டிருக்கிறேனே நானும்...

எனில் என்னவன் கடவுளின் அம்சமோ??
இல்லை காணாது காதலில் கசிந்துருகுவதில் நான் தான் அக்கோதையின் வம்சமோ????

தன்னவனான ஈசனை
மணம் புரிய
தவமிருந்தாராமே பார்வதியும்
எனில் என்னவன் சிவனின் அம்சமோ???
இல்லை என்னவனுக்காய் நோன்பிருந்து தவமிருக்கும்
நான் தான் பார்வதியின் வம்சமோ???

இவை ஏதும் இல்லையெனில்,

ஏன் என்னை ஏங்க வைக்கிறாய்
எனக்கானவனை எண்ணி???

ஏன் என்னை தவிக்க வைக்கிறாய்
என் திருமண நாளை எண்ணி???

எனக்காய் பிறந்த என்னவனை
என்னுடன் இணைத்துவிடு கண்ணா...

இல்லையென்றாலும்
இராமருக்காய் காத்திருந்த சபரியாய்,
மனம் முழுக்க நிறைந்து வழியும்
காதலுடன் காத்திருப்பேன் அவனுக்காகவே...

என் காதல் முழுவதும் என்னவனுக்காகவே...
என்னை மணக்கும் என் மன்னவனுக்காகவே என்று....

-- நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now