நீ வேண்டும்

54 7 1
                  

என் கற்பனைக்கு
உயிர் கொடுக்க
நீ வேண்டுமடா...

என் மனதின்
நிழல் பிம்பத்தின் நிஜமாய்
நீ வேண்டுமடா....

என்னுள்
வியாபித்திருக்கும்
காதலின் உருவாய்
நீ வேண்டுமடா....

என் காத்திருப்பின்
பலனாய்
நீ வேண்டுமடா....

கருப்பென்றும்
குள்ளமென்றும்
பருமனென்றும்
மணவாழ்க்கைக்கு
தகுதியற்றவளாய்
பெண்ணை
திருமணச் சந்தையில்
புறந்தள்ளும் உலகில்
புற அழகை காணாது
மன அழகிற்காய்
எனை ஏற்றுக்கொள்ளும்
மாண்பாளனாய்
நீ வேண்டுமடா....

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now