அவள் 03

996 29 19
                                    

மேலே ஏற தயாராகும் போது பாரதி அவனை அவள் இன்சொல்லால் அவள் வழக்கமாக அவனை புகழ்வது போல புகழத் தொடங்கினாள். அவள் இருக்கும் இடத்திற்கு வந்து கயிற்றை கட்டியதால். ஆனாலும் மனதில் ஏதோ ஒரு இனம் தெரியாக சந்தோஷம்.

   விடுவானா ஆதி!! நான் உன் கழுத்துலயாடி கட்டினன்.சும்மா இப்படி ஆடு மாதிரி கத்துற என்று ஒரு சத்தம் வைத்தான்.அவ்வளவு தான் அவள் திருவாயை கம் என்று மூடிக் கொண்டாள்.ஆதி தன் பாட்டில் மேலே ஏறி வேளையை தொடர்ந்தான்.பாரதியும் தன் வேளையை தொடர்ந்தாள்.

  ஆதி மேலே ஏறி வேளையில் மூழ்கினான். மும்முரமான வேளையின் காரணமாக தான் கூரையின் விளிம்பில் இருக்கிறோம். என்பதை கூட உணராமல் இன்னும் பின் நோக்கி வரவே.

ஆதி அம்மா என்று கதறிய  படி கீழே சரிந்தான். இதனை கண்ட பாரதிக்கு கண்கள் இருண்டு மயக்கமானாள்.இவள் விழுவதை கோயிலிற்கு வந்த கோதை பாட்டி கண்டு அவசரமாக வந்து தாங்கி பிடித்தார்.
     ஆதி ஏற்கனவே மலைக்கு ஏறுவது போல கயிற்றை வயிற்றில்  கட்டி இருந்ததால் தலை கீழாக நிலத்திற்கு ஒரு அடி மேலே தொங்கினான்.தலை கீழாக இருந்த ஆதியை நண்பர்கள் கயிற்றை அவிழ்த்து சரி செய்தனர்.பின் அவன் பாரதியிடம் ஒரே எட்டில் சென்றான்.அவன் எவ்வளவு தட்டியும் ,நீர் தெளித்தும் எழாதவள் ஆதி.. ஆதி.. முனங்கிக் கொண்டே இருந்தாள்.
   
ஆதி மனதில் ஏக குழப்பம் "நான் கயிர் கட்டி இருப்பது அவளுக்கு தெரியும். நான் கயிற்றை கட்டியதை பார்த்து கோபப்பட்டாள்.ஆனால் நான் விழும் போது கயிறு கட்டியதை மறந்து கத்தினேன்." ஆனால் இவள் எதற்கு... என குழம்பினான்.
   
   ஆனால் பாரதி விழும் போது தாங்கி பிடித்த கோதை பாட்டியிற்கு அதை விட ஏக குழப்பம்
  
     பாரதி எவ்வளவு முயற்சி செய்தும் எழாததால். ஆதி தன் கையில் ஏந்தி சென்று தாத்தாவின் காரில் ஏற்றி அவனும் தாத்தாவும் பாட்டியும்  நண்பர்களிடம் கூறி அவசரமாக வைத்தியசாலைக்கு விரைந்தனர்.

      அவன் தூக்கியது தெரிந்தாள் பேய் ஆட்டம் ஆடுவாள் என அறிந்து அதை மறைத்து விட்டனர்.

என் அவள்Where stories live. Discover now