அவள் 35

659 18 6
                                    

மெதுவாக அங்கிருந்து ஆதியிடம் வந்து. ஆதியின் தலை வருடி. இந்தாப்பா  கொஞ்சம் தண்ணியாச்சும் குடி உடம்புல கொஞ்சமாச்சும் தெம்பாவது வரும் என்று தண்ணீர் போத்தலை நீட்டினார்.

அதை வேகமாக தட்டிவிட்டவன் முகம் கோபத்தில் சிவந்தது. ஒழுங்கா  இங்க இருந்து போயிடு. இல்ல நான் மனிஷனாகவே இருக்க மாட்டேன்.

என்னப்பா சொல்ற... நான் என்ன பண்ணினேன்.

ஓ... உங்களுக்கு ஒன்னுமே தெரியாத பாப்பா பாவம் என சீரியவன்.

உனக்கு   என்னப்பார்த்தா இழிச்சவாயன் போல இருக்கா?

உன் நடிப்ப நிருத்து எனக்கு எல்லாம் தெரியும் என்று பல்லை நற நறவெனக் கடித்தான்.

என்ன.....

என்னப்பா சொல்ற? என்று சத்தமாக வாய்விட்டே உளற,

அவரது கண்ணில் பயத்தை கண்ட  ஆதியின் உதடுகள்  வலைந்தன. என்ன ஆச்சரியமா இருக்கா...

இல்லப்பா நீ ஏதோ தவறாக புரிஞ்சிகிட்டு இருக்க. என்று கூறி மேலே கூறப்போக.

இதே போல நீங்க தவறாக புரிஞ்சிகிட்டு இருக்கீங்கனு என் பாரதி எத்தனை தடவை சொல்ல முயற்சி பண்ணி இருப்பா. நீ அவ கதைக்கிறத காது குடுத்து கேட்டீயா?

அவள் சொல்ல வரத கொஞ்சம் காது கொடுத்து கேட்டு இருந்தா என்ன? பாவம் வெளிலயும் சொல்ல முடியாம மனசுக்குள்ள வச்சிகிட்டு  என்ன பாடு பட்டு இருப்பா.

பாரதி ஒரே சொல்லுவாள். எனக்கு கிடைக்காத வரம் கவிக்கு கிடைச்சிருக்குனு. கவி அம்மாவாக போறத கேட்டு எவ்வளோ சந்தோஷப்பட்டா தெரியுமா?  அவள மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் தான் வரம் கொடுத்து வச்சிருக்கனும்.

என்னமோ குழந்தை இல்ல. குழந்தை இல்லனு சொல்லி அவள மட்டம் தட்டினீங்களே கடவுள் கூடிய சீக்கிரம் எங்களுக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பான். எங்களுக்கு குழந்தை பொத்துக்க வயசு இருக்கு. உங்கள மாதிரி வயசு போயிடல்ல.

இல்ல ஆதி... அது... நா... என்று தடுமாற

சீ என்ன திரும்ப கதைச்சி கிட்டே இருக்க. அது தான் எல்லாம் தெரியுமுன்னு சொன்னேன்ல.  அவளோட வீட்டுல வைத்தே அவள கொடுமை படுத்தி இருக்க. சீ...நீ எல்லாம் ஒரு பொண்ணா?

பொறுயாய் இருங்க சரளா தன் குட்டு வெளிப்பட்டு விட. ஆவேசமாக  மாறி ஆமான்டா  ஆமா...  அந்த அபசகுணம் பிடித்தவ வாழ்ந்து என்ன சாதிச்சிட போறா? என்று கேட்க.

அவ்வளவு தான் சரளாவின் காது குங்..... குங்.... என்றது

ஆம் ஆதி பொறுமை பறந்து அறைந்து விட்டான்.

ஆதியின் குடும்பமோ ஆதியை தடுக்காது ப்ளட் தேடிக் கொண்டிருந்தது.

போடி.... போ என் கையால அடிபட்டு சாகம போ.... என ஆவேசமாக கத்த

சரளா கவியை பார்த்து ஏன் டி என்ன இவ்வளவு கேவலமாக திட்டுறான் நீ கேட்டுகிட்டு இருக்க. வாடி வீட்டுக்கு போக . நாங்க இவங்க முன்னாடி வக்கில்லாதவங்க போல நிக்கனுமா... வா என கவியை இழுத்துக் கொண்டு செல்ல.

தன் அக்காவை விட்டு விலக மனம் இல்லா விட்டாலும். தன் அத்தை இருந்தால் பிரச்சினை அதிகமாகிவிடுமோ என பயந்து ஆதியிடம் தலையை அசைத்தவாறு புறப்பட.

சரளாவோ சரளாவோ முதல்ல அவள் குணமாகி வரட்டும் அதுக்கு அப்புறமாக சீரழிக்க ப்ளேன் போட்டவளாக அங்கிருந்து சென்றார்.

தொடரும்....



என் அவள்Where stories live. Discover now