அவள் 41

145 7 0
                                    

காலை குளித்த முடித்துவிட்டு வெளியில் வந்த பாரதி  தலையை துவட்டிக் கொண்டு கண்ணாடி முன் அமர்ந்தாள். நெற்றியில் குங்குமம் இட்டு திரும்ப ஆதி பின்னால் இருந்து சட்டென அவள் கண்களை மூடினான்.

மூடிய கையை பிரித்து எடுத்து கடித்து வைக்க அம்மா என அலறினான்.

போடி போ ஒரு குட் நியூஸ் சொல்ல வந்தேன் நீ என்ன கடிச்சா வைக்கிற. போ.... சொல்ல மாட்டேன் என முறுக்கி கொண்டான்.

அவன் நீ சமாதானப்படுத்தவா பாரதிக்கு தெரியாது. கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க. ஆதி அவளை மீண்டும் நெருங்கி வர தள்ளிவிட்டு இப்ப சொல்ல போறீங்கலா? இல்லையா?

இப்படி வந்தா சொல்லுவேன் என கை விரித்தான் ஆதி. அவன் கைவளைவில் வந்தவள் இப்ப சொல்லுங்க.

அது வந்து என் ஃப்ரெண்ட் பாஸ்கர் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கான்னு சொன்னேன் தானே.  

சரி அதுல என்ன குட் நியூஸ் என சினுங்க.. முழுசா சொல்ல விடுவேன் பொண்டாட்டி. அவன் மட்டும் வரல. அவன் வைஃப் மதுவும்   வந்திருக்காங்க. அவங்க ஒரு   விசேட மகப்பேற்று வைத்தியர். குழந்தை இல்லாத நிறைய பேருக்கு டிரீட்மென்ட் கொடுக்குறாங்க.

நாளை நம்மளயும் வர சொல்லி இருக்காங்க. நாம போய் மீட் பண்ணிட்டு வரலாம்.
இல்லங்க கடவுளா போகும்போது கொடுக்கட்டும். என்று கூற எரிச்சல் அடைந்தான் ஆதி. மூன்று வருஷமா உன் பேச்சு தான் கேட்டுத்தான் தலைய தலைய ஆட்டினன். கடவுள் ஒரு நாளும் சும்மா இருக்கிறவனுக்கு கொடுக்க மாட்டான். முயற்சி செய்பவர்களுக்குத் தான் கொடுப்பான். இப்ப நான் அடுத்த முடிவுக்கு நீ கட்டுப்படுவியா? மாட்டியா?

  ஓகே மிஸ்டர் ஆதி எனக்கு அளித்த கண்ணடித்தவள். அவனது கைவளைவுக்குள் இருந்து எழுந்து ஓடிவிட்டாள்.

அப்பா எப்படி ஒரு டாக்டர் கிட்ட போக சம்மதிச்சுட்டா... தேங்ஸ் கோட்.என கடவுளுக்கு நன்றி சொன்னான்.

மறுநாள்  கொஞ்சம் லேட்டாவே விடிந்தது இருவருக்கும்.  நேரம் காலத்துடன் முடித்துக் கொண்டனர். சொல்லப்போனால் ஆதி பாரதியை தூங்க விடவே இல்லை. அதற்காக பாரதி கும்பகர்ணி போல் தூங்கினாள் என்று இல்லை. அவளுக்கும் குழந்தை மேல் ஆசை  இல்லாமல் இல்லை. அவளுக்கும் குழந்தை நினைவில் தூக்கம் தூரப் போயிருந்தது.

ஆனால் ஆதி குழந்தைக்காக ஏங்குவதை கடந்த மூன்று வருடங்களில் இப்போது தான் வெளிப்படுத்துகிறான்.

பாரதியை ஆதியை பார்த்துவிட்டு கடவுளை அவருக்காவது எனக்கு ஒரு குழந்தையை கொடு என மனமுருக வேண்டினாள்.

இருவரும் தயாராகி லதாவிடம்   மாத்திரம் சொல்லிவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டனர்.

ஹாஸ்பிடல் செல்லும் வழியெல்லாம் பாரதி கடவுளை மனதால் வேண்டிக் கொண்டே சென்றாள்.ஆதி  அவளுக்கு தைரியம் கொடுத்தபடியே சென்றாலும் டாக்டர் ஏதாவது தவறாக சொன்னால் பாரதியின் நிலையை நினைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது. அதனை காட்டிக் கொள்ளாது ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.

உள்ளே வந்தவர்கள் ரிசப்ஷனில் டாக்டருக்கு காத்திருக்க அவர்களை உள்ளே அழைத்தார் டாக்டர்.

பாரதி பயத்தின் ஆதியை இரு பிடித்துக்கொண்டாள்.ஆதி ஆதரவாக அனைத்துக் கொண்டே உள்ளே சென்றான். உள்ளே சென்றவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு கை கொடுத்தார்கள் சில மணி நேரம்  பாரதியையும் ஆதியையும்  சில  டெஸ்ட் செய்து.  ரிபோர்ட் வரும் வரை படபடப்புடன் அமர்ந்திருந்தார்கள்.

தொடரும்......

என் அவள்Where stories live. Discover now