அவள் 18

572 18 9
                                    

ஏன்  என்றால் ஆதி  அப்படித்தான் இருந்தான். வீழ்ந்திருந்த கம்பனியை  பிரபல கம்பனியாக மாற்றியது மட்டுமல்லாமல். அங்கே வேலை  செய்யும்  ஒவ்வொருவரதும் நலனில் அக்கறை  எடுத்துக் கொண்டான்.

அன்றிரவு பாரதியை  தவிர வேறு யாராவது  மழையில் தனியே நின்றிருந்தால்  நிச்சியமாக அப்படி வேகமாக  போய் இருக்க மாட்டான். பாரதி என்பதாலே பார்த்தும் பார்க்காதது போல் சென்றான்.

ஆனால் பாரதியை கவனிக்க இரண்டு காவலர்களை வைத்திருந்தது யாரும் அறியாத விடயமே.

மறுநாள் ஆபீஸ் போகவும்  மஹிமா  பாரதியை பார்த்த வாங்க மா ரதி என்றாள். பாரதிக்கு  எங்கிருந்து தான் அப்படி ஒரு  கோபம் வந்ததோ தெரியவில்லை.

(ரதி பழைய ஞாபகங்களில் ஒன்று)

எனக்கு  பெயர் இல்லயா? சொல்லுடீ.  அது என்ன ரதி? நீ வேலை சம்பந்தபட்ட விஷயம் ஏதாவது இருந்தா மட்டும் பேசு. தேவை இல்லாம பேசினா வாய கிழிச்சிடுவேன். நீ திரும்ப  பேசின நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கத்தினாள்.

நான் அப்படித்தான் ரதினு சொல்லுவன் என்ன செய்வ நீ என்று மஹிமா செல்லி முடியவில்லை  பாரதியின் கரம் இடி என முழங்கியது.

மஹிமா பேச வாய் எடுக்க. ஆதியை கண்டு  அமைதியானாள். ஏனென்றால்  ஆதி உள்ளே வந்து கொண்டிருந்தான்.

பாரதியின் அதிரடியான பேச்சு வார்த்தை, சிவந்த முகத்தை பார்த்தவன் இதற்கு மேல் முடியாது என உள்ளே வந்தான்.

இது ஆபீஸ்.  சந்தை இல்ல. ஏன் இவ்வளோ சத்தம்  என்று கேட்க.

பாரதி; மஹிமாவை காட்டி இவள்..... இவள் என  என கோபத்தில் மூச்சி வாங்க. ஆதிக்கு புரிந்தது. தவறு மஹிமாவின் பக்கமே என்று. ஏன் எனில் பாரதி   சாதரணமாக கோபப்படுபவள் அல்ல. பாரதியை முற்றிலும் அறிந்தவன் அல்லவா ஆதி. எனினும் மரியாதையா பேசினா நல்லா  இருக்கும் என்றான் ஆதி.

என் அவள்Where stories live. Discover now