அவள் 17

618 20 32
                                    


மஹிமா  ஆதியை ஒரு போதும் சந்திக்க விடாது அவளே  அந்த வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய  பாரதிக்கு ஏக சந்தோஷம்.

மஹிமாவை பாரதி ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை.

வெளியே  செல்ல முடியா விட்டால் என்ன  என்று புத்தகம் வாசிக்கத் தொடங்கினாள். நண்பிகளுடனின் நேரில் கதைக்க முடியா விட்டால் என்ன என்று போனில் தங்களுடைய உறவை பலப்படுத்திக் கொண்டனர்.

நாட்கள் நகர சோதனையும் வந்து சேர்ந்தது.

மஹிமா  அன்று காய்ச்சல் என்று திடீர் லீவு. மஹிமாவிற்கு காச்சல் என பாரதி அறிந்திருந்தாள்  இவள் போய்  ஹோஸ்பிட்டலில் எட்மீட்  ஆகியாவது லீவு வாங்கியிருப்பாள். எல்லாம் விதியின் சதி.

ஐயோ... கடவுளே....
இவன் கூட நான் வேல பாக்கனுமே இன்னக்கி என்று டென்ஷனில் இருக்க ஆதியிடமிருந்து அழைப்பும் வந்தது.

பாரதி ஆதியின் முன் நிற்க, ஆதியின் முகம் கடு கடு என  இருந்தது. இவளுக்கும் அதற்கு மேல் கோபமிருக்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முறைத்துக் கொண்டனர்.

பாரதி பார்வையை வேறு பக்கத்திற்கு அகற்றிய படி.

ஏன் சார் கூப்பிட்டீங்க.

டைம் என்ன தெரியுமா?எனக்கு  இன்னும் காபி வரல என்றான்.

ஓ.... ஸாரி சார் எனக்கு உங்க தேவை எதுவும் தெரியாது. மஹிமாவே பார்த்து பார்த்து செய்றதால  "(பார்த்து பார்த்து என்பதில் அழுத்தம் கொடுத்து)"எனக்கு தெரியாம போயிடுச்சி.இதோ கொண்டு வரேன் சார் என்றாள்.

அன்று முழுவது  ஆதி எதை கேட்டாலும் இதே பதில் வெவ்வேறு முறையில் வர. ஆதி உச்ச கட்ட கோபத்திற்கே சென்றான்.

மிஸ். பாரதி உங்கள என் பீ.ஏ வாக போட்டது எதற்கு என்று தெரியாவிட்டால் மஹிமாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது தானே என்றான் கோபமாக.

நீங்க சொல்லி மஹிமா தார வேலைய தான் நான் சரியாக செய்துட்டு இருக்கேனே சார். திரும்ப என்ன செய்யனும்.

என் அவள்Where stories live. Discover now