அவள் -28

458 15 4
                                    

பாரதி ஆதியின் மீது சாய்ந்து சாரிங்க. நா இனி இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்.

ஓகே மை ஸ்வீட் ஹாட் என்று கூறி, கன்னத்தில் முத்தமிட்டு  ரோஹினி எங்க. என்று கேட்க. பதறினாள் பாரதி.

எதுக்காக ரோஹினிய தேடுறீங்க.ப்ளீஸ்க இத இத்தோட விட்டுடிங்க. வீட்டுல இருக்குற அத்த, மாமா,வம்சி  எல்லாருக்கும் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. அது மட்டுமில்லாம ரோஹினிய திட்ட வேறு செய்வாங்க. அவ என்ன இன்னும் வெறுத்துடுவா என கண்கலங்க கூற.

சரி நா எதுவும் பேசல. போதுமா?

ஹூம் சரி.

நான் ஆபீஸ்  கிளம்பனும். நீ டிபன் ரெடி பண்ணுமா என பாரதியுடன் கதைத்த படி வெளியே வர.

சிவா வந்திருப்பதைக் கண்டான்.(ரோஹினியின் கணவன்)  மச்சான் எப்படா வந்த.

இப்ப தான்டா என கூற. ஆதி சிவாவின் அருகில்  அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்க.

ரோஹினி கையில் துணிப் பையுடன் வந்து அண்ணா... நான் போய் வரேன். என்னங்க அண்ணகிட்ட சொல்லிட்டு வாங்க போகலாம். என்றவளது முகத்துயும் பார்க்காமலே போ... திரும்ப வந்துடாதே என்றான் சத்தமாக.

அண்ணா..... என்றாள்  ரோஹினி  அதிர்ச்சியாக.

உன் விஷம் தடவின நாக்க வச்சிகிட்டு அண்ணானு இந்த வீட்டு பக்கம் வந்துடாத, நல்ல மனுஷியா நல்ல குணத்தோட. முக்கியமா எங்க வீட்டுல  யாரையும்  கஷ்டப்படுத்தாம இருக்குரதா இருந்தா வா...  இல்ல எனக்கு நீ கூடப்பிறந்தவ என்டுரதயே மறந்திடு. நீயும் ஒரு பொண்ணு தானே.

மச்சான் எப்ப வேணாலும் நீ தனியா வா.

உனக்காக எங்க வீட்டு கதவு எப்பவும் திறந்திருக்கும் என்ற படி  வேகமாக  ஆபீஸை நோக்கி கிளம்பினான்.

ஆதி கிளம்பிய மறுபுறம் முன்னே வந்த லதா.

சரி  சிவா வந்தாச்சில கிளம்பு என்று கூற வேகமாக சென்று குழந்தையுடன் சென்று கானில் ஏறிக் கொண்டாள்.

என் அவள்Where stories live. Discover now