அவள் 06

659 23 7
                                    

கலை விழா முடிந்து அனைவரும் வெளியேற. ஆதி பாரதியிடம் வந்து எப்படி என்னோட  சர்ப்ரைஸ். (என வாயாலே வம்பை  விலைக்கு வாங்கினான்)

(ஓ சார்ட வேலை தானா??  மாங்கா மண்டயான். என்னோட வேலைய ஈஸியாக்கிட்டான். நானும் யாருனு தேடனும்னு நினைச்சன் பரவல்ல. ஐயாவே சொல்லிட்டாரு. என மனதால் நினைத்தாள்)

ஆதி பாரதியை பார்த்து.

திடீரென பாட்டுக்கு தான்  உன் பெயர  போட்டிருக்குனு சொன்னா. ஷாக் ஆகிடுவ. ஐயோ நான் இதுக்குலாம் வரலனு. ஓடுவனு  எதிர் பார்த்தான்.

ஓ... ஐயாவுக்கு  அப்படி வேற ஆசை இருக்கா... என ஏளனமாக சிரித்தாள்.

டூயட் சாங் அ  தனியா சலிக்காம பாடிட்ட. பாராட்ட வேண்டியது தான்.

பாரதி உண்மையிலேயே சூப்பரா பாடின. 

யாருடா உன் பாராட்ட கேட்டது. உன் பாராட்ட தூக்கி குப்பைல போடு.ப்ராடு என அடிக் குரலில் சீறினாள்.

நீ நினைக்குற அளவுக்கு நான் வீக் ஆனவ இல்ல. நான் பாரதிடா.... திவ்ய பாரதி.

எனக்கு எதையும் வாங்கி  வச்சிக்கிற பழக்கம் இல்ல.  ஸோ கூடிய சீக்கிரம்  வட்டியும் முதலுமாய்  வந்து சேரும் என்ற படி இடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஆதி ஏளனமாய் சிரித்த படி தன் காரை நோக்கி நடந்தான்.

பாஸ்கர் ஆதியிடம் வந்து.  டேய் ஆதி. இந்த தடவ செம்ம கடுப்புல இருக்கா.

நீயே கண்டல்ல. அந்த ஸ்பீச் அ எழுத லைப்ரரில எத்தன புக்ஸ்  ரீட் பண்ணினான்டு.

அப்படி கஷ்டப்பட்டு எழுதி. அத பாடம் செய்த பிறகு  பேச முடியாம பண்ணிட்டியே டா. பாவமா இருக்குடா என்ற படி.

ஆதி  பாத்துட்டே இறி இந்த தடவ பெரி ஆப்பா வெக்க போறா என்று கூற.

அந்த ஆப்பு இந்த ஆதி கிட்ட வேகாது.(பார்போம் வேகுதா? இல்லயானு) என்ற படி காரில் ஏறி பறந்தான்.

நாட்களும் நகர.

கல்லூரியில்  மாணவர்களை நான்கு குழுவாக பிரித்து தலைப்பு வழங்கி ப்ரஸன்டேஷன் செய்ய வேண்டும்  என்றும். புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அணித் தலைவர்களாக
ஆதி,கெளஷிக், பாரதி, கனிகா  தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் ப்ரஸன்டேஷன் நடை பெற்றது. இறுதி நாளே அணித்தலைவர்களது  ப்ரஸன்டேஷன். அதுவே இறுதித் தினம் என்பதால் கலை கட்டியது.

இறுதி நாளான மூன்றாம் நாள் பாரதி அழகாக தயாராகி. வழமையை விட சீக்கிரமாக கல்லூரிக்கு சென்று ஆதிக்காக காத்திருந்தாள்.

அணித் தலைவர்கள் அனைவரும் அழகாக ஆடையணிந்து கண்களை கவரும் விதமாக வருகை தர.

ஆதியும் பாரதியை காக்க விடாமல் வந்து சேர்ந்தான்.

ஆதி  வருகின்றதை கண்ட பின்பே. பாரதி ஹப்பா என நிம்மதியாக மூச்சிவிட்டாள்.

கஷ்டப்பட்டு எழுந்து நேரத்தோடு வந்து. காத்துட்டு இருந்தா. பயபுள்ள வராதோனு பயந்துட்டன்.  வந்துட்டான்யா வந்துட்டான். என  சிரித்துக் கொண்டாள்.

ஆசிரியரும் வர.

முதலில் யார் ப்ரஸன்டேஷன் செய்வது என பார்க்க சீட்டு போடப்பட்டது.

பாரதி முதலாம் இலக்கத்தையும்

கெளஷிக் இரண்டாம் இலக்கத்தையும்

ஆதி மூன்றாம் இலக்கத்தையும்

கனிகா  நான்காம் இலக்கத்தையும்

பெற்றுக் கொண்டனர். பாரதி ஆதியின்  இலக்கத்தை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டாள்.

எல்லாம் எனக்கு சாதகமாகவே நடக்கிறது என்று எண்ணிய படி.

தொடரும்......

என் அவள்Where stories live. Discover now