அவள் 29

418 17 4
                                    

ஆதி ஆபிஸிற்கு சென்ற பின் வழமையான வேலைகளை பாரதி தொடங்க.

லதா பாரதியின் அருகில் சென்று அம்மா பாரதி.ரோஹினி சொன்னது எதையும் மனசுல வச்சிசாதமா...

அவள் என் மாமியார் கூட சேர்ந்துட்டு இப்படி நடந்துக்குரா. அவள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா என இரண்டு கைகளையும் சேர்த்து வணங்க.

பதறிய பாரதி. ஐயோ என்ன அத்த. நீங்க வேற அவ சின்னப் பொண்ணு. தெரியாம பேசுறா. இத யாரு சீரியசா எடுத்துப் பாங்க.

ஆனால் நீங்க செய்றது தான் கஷ்டமா இருக்கு.மன்னிப்பு அது இதுனு கேட்டு என்ன கஷ்டப்படுத்துறீங்க.

லதா கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு பாரதியின் நெற்றியில் முத்தமிட.

இதனைக் கண்ட வம்சி. தொண்டையை சொறுமிக் கொண்டே அய்யோ..... கடவுளே.....
இவங்க அலப்பற தாங்க முடியலயே என கேலி செய்ய.

பாரதியும் லதாவும் சிரித்துக் கொண்டே.

ஆமாடா நானும் என் பொண்ணும் வேண்டியத செய்வோம்.அதில உனக்கு பொறாமையா? என லதா கேட்க.

என்னது.... பொறாமையா..... எனக்கா.... இந்த வம்சி கிரிஷ்ணாக்கா....

ஹும் இது உங்க பொண்ணா? என் ஆதினா மனைவி. உங்க மருமக.

நீங்க இப்படிலாம் தாங்கு தாங்குனு தாங்க கூடாதுமா? எத்தன நாடகம் பார்க்குற. அதுல ஒன்னுல சரி உன்ன போல மாமியார் இருப்பாங்களா?

அப்பதான் மா உங்க லைப் ரொம்ப கலை கட்டும் என்று கூற.

டேய் வம்சி. இவ என் தம்பி பொண்ணு. அதனால பார்த்தா பாசம் மட்டும் தான் வரும்.

நீ கல்யாணம் பண்ணின பிறகு நான் யாருனு சரியா காட்டிடுறன் சரியா? அப்போ என் லைப் ரொம்ப ரொம்ப கலை கட்டும்ல.

என்னது....
எனக்கு வரப்போறவலுக்கு நீங்க வில்லியா?
அம்மா என்ன விட்டுடுங்மா... நான் இதுக்கு வரல என ஓடிட. நிலமை சீராகி வீடு பழைய படி கலகலப்பானது.

அதே நேரம் பாரதிக்கு கோல் வர. ஆன்ஸர் செய்ய மறுமுனையில் கவி சொன்ன செய்தி கேட்டு குதூகலமானாள்.

என் அவள்Where stories live. Discover now