அவள்-39

224 11 4
                                    

அனு நீ என் செல்லமில்ல. அமைதியாக இருடா...என சிவா குழந்தையுடன் புலம்பிக் கொண்டிருக்க.

ஆதி மேலே இருந்து சிவாவையும் அனுவையும் பார்த்து சிரித்தபடி கீழிறங்கி வந்து அனு என்று கதைத்தது தான் தாமதம் குழந்தை சிரித்துக் கொண்டே அவனிடம் தாவியது.

சிவா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு குழந்தையிடம் என்னப் பார்த்தா உனக்கு வில்லன் மாதிரி தெரியுதா உனக்கு என்று கேட்க.

ஆதி சிரித்துக் கொண்டே  சிவாவின் முதுகில் ஒரு குத்து வைத்த படி சின்னக் குழந்யைங்க சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாங்க.  கொஞ்சம் விளங்குற வயசு வந்ததும் அவங்களுக்கே புரிஞ்சிடும்.என்று கூற.

டேய் மச்சான் உனக்கு சொன்னா புரியாது. நீயும் அப்பாவாகி உன் குழந்தை உன்ன தவிர மற்ற எல்லார் கூடயும் இருக்குறப்ப  என் கஷ்டம் உனக்கு புரியும் என்று கூற.

ஆதி  ஒன்றும் கதைக்காது சிரித்துக் கொண்டே அவ்விடம் விட்டு செல்ல. தான் கூறியதின் கருத்தை உணர்ந்த சிவா நாக்கை கடித்துக் கொண்டான்.

கவியின் வளைகாப்பிற்கு கார்த்திக் வந்து கவியுடனே இருந்தாலும் கவியின் முகம் கலையிலந்தே இருந்தது.

கார்த்தி என்னமா எதாவது உடம்புக்கு முடியலயா? இல்ல வேறு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டும். எதுவும் இல்லை அடிறடித்துச் சொல்லி விட்டாள்.

ஒருவாராக ஆதி, பாரதி,ரோஹினி,சிவா,வம்சி,லதா,ராஜ், கோவை  பாட்டி என எல்லோரும் தயாராகி கவியினது வளைகாப்பிற்கு செல்ல.ஆதியின் மனமோ ஏதோ பதட்டமாகவே இருந்தது.

கவியின் வளைகாப்பிற்கான ஏற்பாடு அதிரடியாக நடந்து கொண்டிருந்தது. பெண்கள் படை படையாக வீட்டுக்கு வந்த வண்ணமிருக்க.

கவி வாடிய முகத்துடனே  அமர்ந்து வாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாரதி ஆதியோடு உள் நுழைவதைக் கண்டதும் கவி சிரித்துக் கொண்டே எழுந்து பாரதியை நோக்கி ஓடிச் செல்ல.

என் அவள்Where stories live. Discover now