அவள் -34

481 13 4
                                    

நர்ஸ் பயந்து போய் ஆதியின் முகத்தைப் பார்க்க. அவன் பிரம்மை பிடித்தவன் சுவரையே வெறித்த வண்ணம் இருந்தான்.

திடீரென சொல்லுங்க சிஸ்டர். என் வைப்க்கு என்னாச்சி. அவளுக்கு எதுவும் ஆகாதுல. அவள் என் கிட்டயே பத்திரமாக வந்துடுவால்ல. எதுக்கு சிஸ்டர் அமைதியா இருக்கீங்க சொல்லுங்க.... சிஸ்டர் சொல்லுங்க... என தொப்பென கீழே விழுந்து அழுபவனை என்ன செய்வது என தெரியாமல் ஹாஸ்பிட்டலில் இருந்த அனைவரும் பரிதாபமாக பார்த்தனர்.

அங்கு இருந்த முதியவர் ஒருவர். உன் பொண்டாட்டி உன்ன விட்டு எங்கயும் போக மாட்டா.என்று கூற.

நர்ஸ் அருகில் வந்து ஆமா ஸார். உங்க வைப்க்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு. அவங்களுக்கு எதுவுமாகாது. டோன்ட் வொரி. கவலைய விட்டுட்டு கடவுள் கிட்ட வேண்டிக்குங்க. என்று கூறிய படி இருக்க.

ராஜ்,லதா,வம்சி, கோவை பாட்டி என அனைவரும் ஓடி வந்தனர்.

லதா ஆதி இருந்த நிலையை பார்த்து ஆடிப்போனார்.

டேய் ஆதி இது என்னப்பா கோலம். என்னடா நடந்தது என்று அவன் அருகில் சென்று கேட்க.

லதாக்கே ஆதியின் நிலையை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

லதா ஆதியின் தலையை தடவி. நீ கும்பிடுற உன்ன கை விடமாட்டாருபா. என்று ஆறுதல் சொல்ல.

வம்சி ஆதியை நெருங்கி. அண்ணா ப்ளீஸ் அழாதண்ணா.... உன்ன நாங்க இப்புடி பார்த்ததே இல்ல.

வாழ்கைல என்ன ப்ரொப்ளம் வந்தாலும் தைரியாமா முகம் கொடுக்கனும்னு நீ தான் அடிக்கடி சொல்லுவியேணா என்று கூற.

வம்சி என்னால முடியலடா.... அவ என் கண்ணு முன்னாடியே லொறில அடிபட்டுட்டா... டேய் அவ என்ன தனியா தவிக்க விட்டுட்டு போக மாட்டா தானே.

இல்லண்ணா அண்ணிக்கு எதுவும் ஆகாது என சிறுபிள்ளைக்கு சொல்வது போல் வம்சி சொன்னான்.

வம்சி அவள் ஒரு வேளை என்ன விட்டு என்று பேசிக் கொண்டிருந்தவனை வம்சி தடுத்து விட்டு

என் அவள்Where stories live. Discover now