அவள் 26

504 20 8
                                    

சூரியன்  தனது  பொற்கரங்களை நீட்ட. யன்னல் வழியாக வந்த சூரிய ஒளி  முகத்தில் பட  தூக்கம் கலைந்தஆதி. சோம்பல் முறிக்க கையை உயர்த்தினான். இல்லை இல்லை உயர்த்த முயற்சி செய்தான்.வலது கை பாரமாய் இருக்க.மெல்ல திரும்பிப் பார்த்தவன் ஆனந்தமாய் அதிர்ந்தான்.

பாரதி சிறு பிள்ளை போல் அவனது கையை இருக பிடித்த படி உறங்குவதை பார்த்துச் சிரித்தான்.

மெதுவாக கையை எடுக்க முயன்ற போது. என் பிளோவ குடு என மீண்டும் கையை இருக பற்றிக் கொண்டாள்.

இப்போ விடுவாள். இப்போ விடுவாள் என எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.கடைசியில்.ஒரு முடிவுக்கு.வந்தவனாய்.பாரதியை இருக அனைத்து நெற்றியில் முத்தமிட.

அந்த ஆழ்ந்த முத்தத்தில் விழித்தவள். ஆதியை அருகில் பார்த்து போந்த போந்த முழித்தாள்.

அவளை பார்த்து குறும்பாக சிரித்தவன்.குட் மோனிங் பாரதி என்று கூற. அவசரமாக எழுந்த அமர்ந்தவள். சரி என எழுந்து பாத்ரூம் செல்லப்போனவளைப் பார்த்து. நீ  எப்பவும் இப்படியா?என்று கேட்க.

எத கேக்குறீங்க?

இல்ல. குட் மோர்னிங் சொன்னா. திரும்ப குட்மோனிங் சொல்லாம  போனியே அத சொன்னேன்.

ஆ... மறந்துட்டன். குட் மோனிங் என்றாள்  சிறு புன்னகையுடன்.

பாரதி வெறும் குட் மோர்னிங் தானா?

வேற என்ன எனக் கூறிக் கொண்டு வந்தவள்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்த பாரதி. நாணத்துடன் அவசரமாக பாத்ரூமில் நுழைந்து கொண்டாள்.

நீ மாட்டமலா போக போற  என நமுட்டு சிரிப்பு சிரித்தவன்.கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான்.

வெளியே  அவனது அம்மா லதா தேநீர் தட்டுடன் நின்றிருந்தார். என்னம்மா இது என்று கேட்க.

டேய் என மருமகள கண்டதும் எல்லாம் மறந்துட்ட பார்த்தியா?  இது தான் டீ  என்றார் கிண்டலாக.

சும்மா போம்மா... நானே கீழ வந்திருப்பேனே.

அவனை  ஏற இறங்கப் பார்த்தவர். உன்ன பார்த்தா நீ வெளியே வர இருந்தவனு மாதிரி  தெரியல. முதல்ல இத பிடி. மருமக பசியோட இருப்பா. என சிரித்த படியே கீழே செல்ல.

ஆமா.... நம்மல பார்த்த ஏன் அப்படி சொன்னாங்க. பார்த்து ஒரு மாதிரியா வேற சிரிச்சாங்களே என்று.  கண்ணாடியின்  அருகில்  டீ யை வைத்து விட்டு பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்தது.

அவனின் வெள்ளை நிற சேர்ட் தோல் பகுதியில் பாரதியினது குங்குமம். அனைத்த போது  நெஞ்சும் பகுதியில் லிப்ஸ்டிக் அச்சுமிருக்க.

இதனை பார்த்த ஆதி. அம்மா நினைச்சதுல தப்பே இல்ல என சிரித்துக் கொண்டு பின்னந்தலையை தடவினான்.

Sinna epi pottuten. Sorry . Enaku idhuku mela solla theriyala paa. Me pawom 😧😧

என் அவள்Where stories live. Discover now