அவள் 19

600 19 8
                                    

மஹிமா ட்ரான்ஸ்வராகி புது  ஆபீஸிற்கு  சென்றாள்! என்ற விடயமறிந்த பாரதியின் தலையின் கல்லை தூக்கிப் போட்டது போல் இருந்தது. வேலை அதிகமாக இருந்ததால்  இரவு வரை வேலை செய்ய வேண்டி இருந்தது.

ஆதி வேலை நிமித்தம் கீழ்த் தளத்திற்கு சென்றான். அங்கே சில வேலை இருந்ததால்  இரவுணவையும் அவர்களுடனே எடுத்துக் கொண்டான்.

திடீரென  கரண்ட கட் ஆனது. மற்றைய லைனை மாற்றி விட பத்து நிமிடமாகும் என கூற  அதற்காக காத்திருக்கும் போது  என் லெப்டொப்பை ஓப் செய்தேனா? என யோசித்தவனுக்கு, பாரதி  மேலே தனியாக இருக்கின்றாள் என நினைவு வந்தது. சரி இப்போ கரண்ட் வரும் தானே. ரொம்ப தைரியமா பேசுவாள். இப்போ தனியா இருந்தா தான் என்னவாம்,  என கீழ் தளத்திலேயே இருந்து விட்டான்.

மேலே  பாரதிக்கோ பகல் உணவை சரியாக உண்ணாததால்  தலை சுற்று ஒரு புறம், கரண் கட், ஆதியை அழைக்கலாம் என பார்த்தால் போனில் சார்ஜ்  இல்லை. எனவே தனது மேசையிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

கரண்ட் வரவும் ஆதி பாரதிக்கான உணவை எடுத்து வந்து மேசையில் வைக்கவும்.

பாரதி கஷ்டப்பட்டு எழுந்து பாத்ரூம் சென்று  முகத்தை கழுவிவிட்டு மெது மெதுவாக வெளியே வரவும் சரியாக இருந்தது.

ஆதி பாரதியை பார்த்து   டின்னர் என  உணவை வழங்கவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். மற்றைய நேரமானால் நீயே வச்சிக்கோ உன் சாப்பாட்டை  என திரும்ப கொடுத்திருப்பாள்.

ஆனால் அவளது  நிலைக்கு  தற்போது உணவு மிகவும் அவசியம் என்பதால் பேசாமல்  உணவை எடுத்து  உண்டு முடித்தாள்.

நேராக ஆதியிடம் சென்றவள். ஸார் என கதைக்க முற்படும் போதே. ஓகே பாரதி நீங்க  வீட்டுக்கு போங்க. வேர்க் முடிஞ்சுது  என்று ஆதி  கூற.

பாரதியோ நான் நாளைக்கு  லீவ் என்று கூற.

ஆதியோ  கூல் ஆக  சரி என தலை அசைத்தான். சரி  நேரமாகிட்டு என கிளம்பியவளை பார்த்து.  ஆதி மனதால் "நீ  லீவ் எடுக்காம போனாலும். நாளைக்கு நீயே லீவ் கேட்டிருப்ப. நீ புத்திசாலி தான்.விஷயம் தெரியும்  முன்னே லீவ் எடுத்துகிட்ட"என  மர்மமாக சிரித்தான்.


என் அவள்Where stories live. Discover now