அவள் 27

496 14 4
                                    


காலமும் வேகமாய் சுழல ஆதியினது வாழ்க்கையும் மிக மிக இனிமையாய்  நகரந்தது.

//////////////////////////////////

என் செல்லமில்ல கொஞ்சம் சாப்பிடுமா...
கண்ணா நீ சாப்பிட்டா அம்மா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பேன்டா...என மாடியில் குழந்தையை சாப்பிட வைக்க முயன்று கொண்டிருந்தாள் ரோஹினி.

ஆனால் குழந்தையோ எங்கே உன்னால் முடிந்தால் சாப்பிட வை என வீடு முழுக்க ஓடித் திரிந்து கண்ணாமூச்சியாடியது.

வெளியே ஆடைகளை உலற விட்டு  வந்த பாரதி  இதனை இரசித்துப் பார்த்தாள். தான் உணவு கொடுத்தால் குழந்தை உணவை உற்கொள்ளும் என்ற நம்பிக்கையில். ரோஹினி  தாயேன்  நா ஊட்டினா நம்ம அனு பாப்பா சமத்தா சாப்பிடுவா என கூறியபடி சாப்பாட்டை  வாங்க கையை நீட்டினாள்.

ஆர்வமாக கை நீட்டிய பாரதியை ஏளனமாகப் பார்த்தவள். ஓஹ்  உங்களுக்கு ப் பத்துக் குழந்தை வளர்த்த அனுபவமா என ஏளனமாக சிரித்தாள்.

எங்கண்ணா தான் உங்கள கட்டிகிட்டு கஷ்டப்படுறான். உங்களுக்கு பிடிச்ச சனி என் பொண்ணுக்கும் பிடிக்கனுமா? வந்துட்டா என் குழந்தைய வளர்க்க. குழந்தைக்கு ஊட்டுறன் என்று சொல்லி என்னையும் என் குழந்தையையும் பிரிக்க ப்ளேன்.பண்ணுரியா?

"இந்த ரோஹினி கிட்ட அது நடக்காது அண்ணி."

உங்க மாயக் கண்ணீர  நம்பி. என் அண்ணா என் கூட பேசாமக்ஷ இருக்கான். மாயக்காரி. என்ன மாயம்  செய்தாளோ... எனக்கூற பாரதி முற்றிலும் உடைந்து போனாள்.

தான் இதற்கு மேல் இருந்தால் கட்டுப்படுத்திய கண்ணீர் வெளியே வந்து விடுமோ எனப் பயந்த பாரதி. சரி ரோஹினி  நீயே ஊட்டு என்ற படி  மாடியிலிருந்து கீழ் இறங்கினாள்.

மாடியில் இருந்த லதா  இதனை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தான்  வெளியே வந்தால் பாரதி இன்னும் கஷ்டப்படுவளே என மறைந்திருந்தார்.

பாரதி கீழே இறங்கிய மறுகணம்  ரோஹினியின் அருகே வந்த லதா.என்னடி உன் நாக்குல என்ன  விஷம். என்னமா  பேசுற.  பாவம் ஈ ,எறும்புக்குக் கூட  துரோகம்  நினைக்காதவ அவ. நீ எல்லாம் ஒரு பொண்ணா? சீ... உன்ன சுமந்து பெத்ததுக்கு விஷத்த குடிச்சி  செத்திருக்கலாம்.

என் அவள்Where stories live. Discover now