அவள் 11

631 18 17
                                    

மறுநாள்  பாரதி ஆபீஸ் வரும் வழியில் ட்ரபிக் இல் மாட்ட .பொறுமையின்றி கைக் கடிகாரத்தை பார்த்த படி நின்றிருந்தாள்.

அந்த வழியே வேகமாக வந்த கார் ஒன்று வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபரை மோதி நிற்காமல் சென்றது.

பாரதி அவசரமாக தனது தொலைபேசியை எடுத்து நம்பர் ப்ளேட்டை   படம் பிடித்துக் கொண்டு. வயோதிபரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறி விட்டு பாரதி பொலிஸ் ஸ்டேஷன் சென்றாள்.

பொலிஸ் ஸ்டேஷன் சென்றவள் வீட்டுக்குத் தெரிஞ்சா நம்ம  கத அவ்வளோ தான். யார்டயும் விஷயத்தை சொல்லிடக் கூடாது. என்று உறுதி பூண்டவளாய் பொலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள் பாரதி.

பொலிஸ் ஸ்டேஷனுக்குள் சென்று தகவலை வழங்கிவிட்டு வண்டியை செலுத்தியது யார்?? என்று கண்டுபிடித்துத் தறுமாறு கூறிவிட்டு வேகமாக ஆபீஸ் சென்றாள்.

*---------------------------*
பவி மனதில்(என்ன இன்னும் பாரதி வரல எப்போதும் நேரத்துக்கு வந்துடுவாளே. இன்னக்கி நேரத்தோட வேற வரதா சொன்னாலே. )என  யோசித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் தடார் என முதுகில் அடி விழுந்தது.

திரும்பிப் பார்க்க சிரித்த முகமாக பாரதி நின்றிருந்தாள்.

"பாரதீ.... இது கையா.... இல்ல வேற ஏதுமா???" ஹப்பப்பா..

முதுகு என்னமா எரியுது தெரியுமா??

ஊருல இருக்குரவலுக ஆயிரம் ப்ரன்ஸ வச்சிட்டு ஜாலியா இருக்குறப்ப. நான் மட்டும் உன் ஒருத்திய வச்சிட்டு படுற படாடு இருக்கே தாங்கல டி.

"உன்ன கட்டிக்க போறவன் பாவம்." என்று  சீரியசாக கூறுவது போல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறிய பவியை முறைத்து வைத்தாள் பாரதி.

அது எல்லாம் அந்த நேரத்துல பாத்துக்கலாம். "நான் முதுகுல குடுக்குறனா?? இல்ல உதட்டுல குடுக்குறனா என்று" கூறி.  எனக்கு "வெக்க வெக்கமாக வருது" என முகத்தை இரண்டு கையாலும் மூடி வெட்கப் படுவது போல் பாசாங்கு செய்தாள்.

ஏய்.....சீ... அடங்கிவாசி தாங்கல என பவி சத்தமிட்டாள்.

அது இல்ல. ஏன் நீ ஆபீஸ் லேட்.

கேட்டுட்டாளே பயபுள்ள. (இத கேட்க கூடாதுனு தானே இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்ததே.)

பாரதி உன்ட தான் கேட்குறன். ஏன் லேட் நீ. நான் கேட்டுட் இருக்கன் நீ பாட்டுக்கு தனியா யோசிச்சிட்டு இருக்க என்ன, சொல்லு டி.

அது ஒன்னும் இல்ல  ஸ்கூட்டி வர வழியில ரிபேர் ஆகிட்டு அது தான் லேட்.

அப்போ என்ன யோசிச்ச.(விட மாட்டேன் என்கிறாளே பயபுள்ள)

நான்  ஆபீஸ்ல பைல இன்று ஸப்மிட் பண்ணணும் அது தான். நீ வேற. நேரம் காலம் தெரியாம. தள்ளு தள்ளு வாரவள நிப்பாட்டி இப்படியா கேள்வி கேட்ப. என்ற படி நைஸ் ஆக அவளிடம் இருந்து தப்பி. உண்மையை மறைத்து. வேலையை ஆரம்பித்தாள்.

"ஆ... பவி நான் இன்று ஆபீஸ்ல இருந்து ஏர்லியா போகனும்."

ஏன் பாரதி ஏர்லியா போற. "பொண்ணு ஏதாச்சும் பார்க்க வாராங்களா? நான் உன் பிரண்ட் ,பிரண்டு என்டு சொல்லுவியே.

நான்  உன் ஆள அ சைட் அடிப்பன் என்டா நீ மறைக்கிற. ஒன்னு சொல்லுறன் நல்லா கேட்டுக்கோ

உனக்கு கணவரா வரப்போறவரு எனக்கு அண்ணன். அண்ணன் மட்டும் தான். ஓகே வா. நீ பயப்படாத. "

என்று சொல்லிக் கொண்டு போனவளின் நடு மண்டையில் நங் என ஒரு குட்டை வைத்து வாய திறந்த வாய பிச்சிடுவன்.

நான் ஈவினிங் லைப்ரரி போறன். அது தான் என பொலிஸ் ஸ்டேஷன் செல்லப்போகும் விடயத்தை மறைத்தாள்.

மாலை 3 மணிக்கு ஆபீஸ் இல் உத்தரவு பெற்று பொலிஸ் ஸ்டேஷன் நோக்கி விரைந்தாள்.

தொடரும்.....

என் அவள்Où les histoires vivent. Découvrez maintenant