அவள் 31

512 15 20
                                    

கதவை திறக்க  ஆதி பதற்றத்துடன் நின்றிருந்தான்.ஆதி  பாரதியை கோபமாகப் பார்த்துத் திட்ட வாய்  திறக்கும் போது அவளது வாடிப் போன முகத்தை கண்டு பதற்றமடைந்தவனாய்.

பாரதி என்ன நடந்தது. நீ அழுதியா? ஏன் கண்ணுரண்டும் சிவந்து வீங்கி போய் இருக்கு. என கேள்விக்கு மேல் கேள்விகளை அடுக்கினான்.

இல்லங்க அப்படிலாம் எதுவுமில்ல.கண்ணுல தூசி விழுந்திட்டு அத கசக்கினேன்  அது தான் சிவந்து போய் இருக்கு.

ஆதிக்கு கோபம் வர. பாரதி இங்க பாரு எனக்கு அழுது வீங்கின முகத்துக்கும், தூசி விழுந்த கண்ணுக்கும்  வித்தியாசம் தெரியாதுனு  நினைச்சியா?

இப்ப என்ன நடந்ததுனு சொல்லப் போறியா? இல்லயா? என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க.

இல்லங்க.நா கொஞ்சம் கூட உங்களுக்கு  பொருத்தமானவ கிடையாது அதனால...அதனால என தடுமாற.

ஹூம்
அதனால என ஆதி அழுத்தமாக கூற

நாம பிரிஞ்சிடலாமா? என சட்டென கேட்க.

ஆதியின் ஐந்து விரல்களும் பாரதியின் கன்னத்னில் ஆழமாக பதிந்திருந்தது.

கோபத்தில் பாரதியை பின் நோக்கித் தள்ளி கழுத்தை அழுத்தி சுவரோடு சேர்த்து பிடித்தான்.

பாரதியின் கண்கள் கலங்கி, இருமல் வரவும் ஆதி வேகமாக கையை எடுத்து. அருகில் இருந்த குவளையால் தண்ணீர் ஊற்றி அவளுக்கு அருந்தக் கொடுத்தான்.

பாரதி அதை அருந்தி முடிக்க.ஆதி கோபத்தை கட்டுப் படுத்த முடியாமல் அறையில்  அங்குமிங்கும் நடந்தான்.

இதுவரை ஆதி பாரதிக்கு சத்தமாக கூட பேசியதில்லை. ஆனால் இன்று நடந்ததை எண்ணி அவனது கோபத்தின் அளவு  பாரதிக்கு புரிந்து. பயந்து  போய்  சுவரில் ஒரு மூளையில்  நின்றிருக்க.

ஆதி, பாரதி தன்னை பார்ப்பதை உணர்ந்து.

அவளிடம் வந்து அவளது முகத்தை பற்றி  அறை விட்ட கன்னத்தை மென்மையாக வருட

பாரதியின் காந்த விழி ஏதோ செய்ய. இழுத்து அவளது இதழை வன்மையாக சிறை செய்து  மூச்சிவிட சிறிது அவகாசம் கொடுத்து. மீண்டும் மீண்டும் மீண்டும்  அவளது உயிர் வரை தீண்டினான்.

நேரம் காலம் இல்லாமல் ஆதியின் போன் அடிக்க அதனை கட் செய்தவன் பாரதியை விட்டு விலகி.

ஏன் டீ இப்படி பண்ணுற. நீ எனக்கு பொருத்தமானவ இல்லனு யாரு சொன்னா? ரோஹினியா?

பதறிய பாரதி ஐயோ இல்லங்க. ரோஹினி என் கூட கதைக்கவே இல்ல.

அப்போ என்ன நடந்தது. நா ஏதாவது உன் மனசு புண்படுறமாதிரி நடந்துகிட்டனா? சொல்லு டீ? ஏன் அமைதியா  இருக்க?

ஐயோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லேங்க. உங்க வாழ்க்க என்னல வீணாகக் கூடாதுனு தான் அப்படி சொன்னேன். என்று கூறி விலகப் போனவளை  இழுத்துப் பிடித்து கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு

பாரதி நீ வந்து பத்தாவது நாள்ல  சும்மாவா உன்ன தேடி வந்தேன். நீ இல்லாட்டி தான் டி. என் வாழ்கையே நாசமாப் போகும். என்னால உன்ன பிரிஞ்சி இருக்க முடியாது டி. எதனால தானே  என் வீட்ட விட்டு உன் கூட  வந்து  நிக்கிறன். இதுலயே தெரிஞ்சுக்க வேணாமா?

அதில்லங்க. உங்க வயசுல  இருக்கிறவங்க. எல்லாரும்  குழந்தை குட்டின்னு  குடும்பமா இருக்கிறப்ப.  உங்களுக்கும் ஆசையாக இருக்குமேங்க.

ஆதி அவளை பார்த்து. கண்டிப்பா... நானும்  குடும்பமா இருக்க ஆசைப்படுறேன். ஆனா அந்த கடவுளா  எப்ப  நமக்கு கொடுக்குறாரோ அப்ப நான் மனசார ஏத்துக்கிறேன்.

நீ இதுக்காகவா பீல் பண்ணுற.என்று கேட்டு  சமாதானப்படுத்த முயன்ற படி. நான்  வரும் போது நீ எதுக்கு அழுதுட்டு இருந்த.  இதுக்கா? இல்ல யாராவது ஏதும் சொன்னாங்களா?  என்று மீண்டும் கேட்க.

இல்லங்க யாரும் எதுவும் கேட்கல. நம்ம கவிக்கு கிடைச்ச வரம்  எனக்கு கிடைக்காதோனு  கொஞ்சம் கவலை அவ்வளோ தான் என ஆதியின் நெஞ்சில் சாய்ந்தாள்.

இங்க பாரு பேபி. நீ என் குழந்தைய சீக்கிரமா சுமக்கத்தான் போற. என்று கூற பாரதி வெட்கமாய் தலையை குனித்துக் கொண்டாள்.

தொடரும்...

என் அவள்Where stories live. Discover now